லாட்டரியில் விழுந்த ரூ.12 கோடி.. EX-க்கு கிஃப்ட் கொடுக்கப்போய்.. மனைவியிடம் சிக்கிய கணவன்.. சோனமுத்தா மொத்தமும் போச்சா..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Feb 15, 2023 06:03 PM

சீனாவில் லாட்டரி மூலம் தனக்கு கிடைத்த பணத்தை மறைத்து முன்னாள் மனைவிக்கு உதவிய நபர் மீது வழக்கு தொடுத்திருக்கிறார் அவரது மனைவி. இது குறித்த தகவல் வெளியாகி அந்நாடு முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Man Hides Lottery Win From Wife Buys Flat For Ex Faces legal action

                      Images are subject to © copyright to their respective owners.

Also Read | சிம்பிளா திருமணம்.. கல்யாணத்துக்கு வச்சிருந்த பணத்தை ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காக கொடுத்த குடிமைப்பணி தம்பதி..!  

சீனாவில் அரசு அனுமதியுடன் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. தங்களது அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க விரும்பும் மக்கள் இந்த லாட்டரி டிக்கெட்டுகளை தொடர்ந்து வாங்கியும் வருகின்றனர். இந்த சூழ்நிலையில் Zhou என்ற குடும்பப் பெயர் கொண்ட ஒரு நபர், இரண்டு வருடங்களுக்கு முன்னர் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த டிக்கெட்டிற்கு 10 மில்லியன் யுவான்கள் (இந்திய மதிப்பில் 12.13 கோடி ரூபாய்) பரிசாகவும் கிடைத்திருக்கிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த அவர் இதுபற்றி தனது மனைவியிடம் தெரிவிக்கவில்லை.

லாட்டரி நிறுவனம் வரி பிடித்தம் போக 10 கோடி ரூபாயை அந்த நபருக்கு வழங்கியுள்ளது. அதில் தனது சகோதரி ஒருவருக்கு ரூ.2.42 கோடியை அனுப்பி இருக்கிறார் அவர். அதன் பின்னர் தனது முன்னாள் மனைவி ஒருவர் வீடு வாங்கவும் 84.93 லட்ச ரூபாயை கொடுத்து உதவி இருக்கிறார் அந்த தாராள பிரபு. இவை எதையுமே தனது மனைவிக்கு அவர் தெரியப்படுத்தவும் இல்லை.

Man Hides Lottery Win From Wife Buys Flat For Ex Faces legal action

Images are subject to © copyright to their respective owners.

இப்படி நாட்கள் செல்ல திடீரென ஒருநாள் அவருடைய மனைவிக்கு லாட்டரி விஷயம் தெரிந்துவிட்டது. உடனடியாக கிழக்கு சீனாவில் உள்ள Zhejiang மாகான நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருக்கிறார் அந்த பெண்மணி. மேலும், கணவர் தனக்கு கிடைத்த பரிசு குறித்து மறைத்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அதுமட்டும் அல்லாமல் தன்னுடைய கணவர் அவரது சகோதரி மற்றும் முன்னாள் மனைவிக்கு கொடுத்த தொகையில் (ரூ.3.27 கோடி)  மூன்றில் இரண்டு பங்கு பணம் தனக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

Man Hides Lottery Win From Wife Buys Flat For Ex Faces legal action

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில் வழக்கு விசாரணை நடந்து முடிந்திருக்கிறது. இதில் தீர்ப்பளித்த நீதிபதிகள், Zhou தனது சகோதரி மற்றும் முன்னாள் மனைவிக்கு வழங்கிய தொகை தம்பதியின் பொது சொத்து எனவும் அதில் 60 சதவீதத்தினை அவர் மனைவிக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருவதுடன் நெட்டிசன்களிடையே இதுபற்றிய விவாதமும் நடைபெற்று வருகிறது.

Also Read | "அவங்களும் சந்தோஷமா இருக்கட்டுமே".. சிங்கிள்ஸ்-க்கு சிறப்பு போனஸ்.. காதலர் தினத்தன்று மேயர் கொடுத்த சர்ப்ரைஸ்..!

Tags : #LOTTERY #WIFE #BUYS #FLAT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man Hides Lottery Win From Wife Buys Flat For Ex Faces legal action | World News.