லிவிங் டுகெதரில் வாழ்ந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. காதலனின் ஆன்லைன் HISTORY-ஐ பார்த்துட்டு அதிர்ந்த அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Nov 15, 2022 01:01 PM

டெல்லியில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிந்திருக்கின்றன.

Sharaddha case her Boyfriend Online search history revealed

Also Read | "பையன எப்படியாச்சும் ஆர்மி ஆபிஃசர் ஆக்கணும்".. பிரிந்து சென்ற கணவர்.. மகனுக்காக பெண் எடுத்த முடிவு!!.. நெகிழ்ச்சி பின்னணி!!

மும்பையில் உள்ள தனியார் கால்சென்டர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார் 26 வயதான ஷ்ரத்தா எனும் இளம்பெண். அப்போது, அவருக்கு அறிமுகமாகியுள்ளார் அஃப்தாப் அமீன் பூனாவாலா. நண்பர்களாக இருவரும் பழகிய நிலையில் நாளடைவில் இருவருக்கிடையே காதல் மலர்ந்ததாக தெரிகிறது. ஆனால் ஷ்ரத்தாவின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். ஆகவே, காதலனுடன் டெல்லிக்கு குடியேறிய ஷ்ரத்தா அமீனுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து, சமீபத்தில் தனது வீட்டினருடன் பேசுவதை ஷ்ரத்தா நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் மதான் டெல்லிக்கு சென்றிருக்கிறார். தனது மகள் இருக்கும் இடத்தை அறிந்த அவர் அங்கு செல்லவே, வீடு பூட்டியிருப்பதை கண்டு சந்தேகம் அடைந்திருக்கிறார். இதனை தொடர்ந்து மெஹ்ரவ்லி பகுதி காவல் நிலையத்தில் அமீன் தனது மகளை கடத்திவிட்டதாக புகார் அளித்திருக்கிறார்.

Sharaddha case her Boyfriend Online search history revealed

இதனையடுத்து காவல்துறையினர் கடந்த 12 ஆம் தேதி அமீனை கைது செய்திருக்கின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அமீனை வற்புறுத்தியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அமீன், ஷ்ரத்தாவை கொலை செய்து அவருடைய உடலை 35 பாகங்களாக வெட்டி, ஃபிரிட்ஜில் வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமும் இரவு 2 மணியளவில் உடல் பாகங்களை எடுத்துச் சென்று டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அமீன் வீசியதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து, காவல்துறையின் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வந்தனர்.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. ஷ்ரத்தாவை கொலை செய்த பிறகு, ரத்த கறையை போக்குவது மற்றும் உடல் பாகங்களின் இயக்கம் குறித்து அமீன் இணையத்தில் தேடியதாக சொல்லப்படுகிறது. மேலும், தனது வீட்டிற்கு அருகில் இருந்த கடையில் இருந்து ஃபிரிட்ஜ் ஒன்றை வாங்கிய அமீன் அதில் ஷ்ரத்தாவின் உடலை பத்திரப்படுத்தி வைத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sharaddha case her Boyfriend Online search history revealed

இந்நிலையில் இதுகுறித்து பேசிய தெற்கு டெல்லி DCP அங்கித் சவுகான்,"இந்த சம்பவம் மே 18 ஆம் தேதி நடந்திருக்கிறது. ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை அருகில் உள்ள காடுகள் மற்றும் சத்தர்பூர் பகுதிகளில் வீசியதாக கைது செய்யப்பட்ட அமீன் எங்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணையை தொடர்ந்து வருகிறோம். உடலை அப்புறப்படுத்த நினைத்த அமீன் உடல் உறுப்புகள் பற்றியும் ரத்த கறைகளை நீக்குவது குறித்தும் இணையத்தில் தேடியிருக்கிறார். அவரிமிருந்து போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன" என்றார்.

இதனையடுத்து, அமீன் மீது IPC 302 (கொலை), 201 (தடயங்களை அழிக்க முயற்சித்தல்) ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சவுகான் தெரிவித்திருக்கிறார்.

Also Read | கால்பந்து வீராங்கனை மரணம்.. மருத்துவர்களின் கவனக்குறைவு தான் காரணமா?.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!!

Tags : #SHARADDHA CASE #BOYFRIEND #ONLINE SEARCH HISTORY #REVEAL #LIVING TOGETHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sharaddha case her Boyfriend Online search history revealed | India News.