மனுஷன் எல்லா இடத்துலயும் இருக்காரு.. FIFA உலகக்கோப்பை போட்டியில் தோனி ரசிகர் வச்சிருந்த போஸ்டர்.. வைரலாகும் PICS..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ஒரு போட்டியில் தோனி ரசிகர் வைத்திருந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read | ஓடும் ரயிலில் இருந்து ராணுவ வீரரை தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகருக்கு பிடிவாரண்ட்.!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. சாதாரண போட்டிகளுக்கே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியிருக்க உலகக்கோப்பை என்றால் சொல்லவா வேண்டும்? மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிரேசில் - செர்பியா அணிகள் மோதிய போட்டியின் போது, அங்கிருந்த தோனி ரசிகர் ஒருவர் தோனியின் CSK ஜெர்சியை பிடித்தபடி புகைப்படம் எடுத்திருக்கிறார். இது தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதேபோல, மைதானத்திற்கு வெளியே அவர் போஸ்டர் ஒன்றுடன் நிற்கும் புகைப்படமும் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. அந்த போஸ்டரில்,"Forever Thala Dhoni" என எழுதப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டுவரை இந்தியாவிற்காக 90 டெஸ்ட் 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் ஆடி மொத்தம் 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்தவர் தோனி. இவரது தலைமையில் ஒருநாள் மற்றும் T20 போட்டி உலகக்கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. பரபரப்பான மேட்ச்களிலும் பொறுமையுடன் வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் செல்வதால் ரசிகர்கள் இவரை 'மிஸ்டர் கூல்' என்றும் 'தல' என்றும் அன்போடு அழைக்கிறார்கள்.
2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி, தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர் துவங்கிய 2008 ஆம் ஆண்டில் இருந்து சென்னை அணியின் கேப்டனாகவும் தோனி தொடர்கிறார். எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தோனிக்கு ஏகபோக வரவேற்பு இருக்கும். இந்நிலையில் கத்தாரில் நடைபெற்றுவரும் கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் அவரது ஜெர்சியுடன் ரசிகர் ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.