9 மணி நேர விசாரணை... போலீசாரிடம் 'உண்மைகளை' ஒப்புக்கொண்ட நடிகை... கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக சமீபத்தில் மும்பை போலீசார் நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் இருவரும் காதலித்தது உண்மை தான் என்றும், நவம்பரில் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் ரியா ஒப்புக்கொண்டார். மேலும் இருவரும் ஒன்றாக வசித்து வந்ததை தெரிவித்த அவர் சண்டை போட்டு இருவரும் பிரிந்து விட்டதாக விசாரணையில் தெரிவித்து இருந்தார்.

ஒவ்வொரு நாளும் இரவு படுக்க செல்லுமுன் தினமும் தனக்கு போன் செய்து சுஷாந்த் பேசுவார் என்றும் ரியா கூறியிருந்தார். மேலும் போலீசார் அவரது மொபைல் போனை சோதனை செய்ததில் இருவரும் பரிமாறிக்கொண்ட வீடியோக்கள், சாட்கள் இருந்ததாக தகவல்கள் வெளியானது. ரியா உட்பட சுமார் 13 பேரிடம் போலீசார் சுஷாந்த் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி இருக்கின்றனர். மேலும் ஒரு சிலரிடம் விசாரணை நடத்திட அவர்கள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பீஹார் கோர்ட்டில் நடிகை ரியா மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. பீஹார் மாநிலம் முசாபர்பூர் பகுதியை சேர்ந்த குந்தர் குமார் என்பவர் தொடர்ந்துள்ள இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணை வருகின்ற 24-ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக சல்மான் கான், கரண் ஜோஹர், ஆதித்ய சோப்ரா, ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேரின் மீது பீஹார் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
