வெளில போன 'மாப்பிள்ளைய' இன்னும் காணோம்... 'சல்லடை' போட்டு தேடிய உறவினர்கள்... 'கற்பூர' மரத்தில் காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வெளியில் சென்ற அபிஷேக் வீடு திரும்பவில்லை என பல்வேறு இடங்களிலும் தேடினர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் அபிஷேக்(29) இவரது மனைவி பவித்ரா(25). இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பவித்ரா அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
தொடர்ந்து நேற்று முன்தினம் அபிஷேக் நேரில் சென்று அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளார். மீண்டும் மதியம் 2 மணியளவில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அபிஷேக் பைக்கை எடுத்துக்கொண்டு வெளியில் சென்று விட்டார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை என்பதால் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் அவரை சல்லடை போட்டு தேடினர். இதற்கிடையில் இரவு 9 மணியளவில் அரக்கம்பை கிராமத்துக்கு செல்லும் வழியில் அவரது பைக் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
மேலும் கல்பாறை என்னும் பகுதியில் உள்ள கற்பூர மரத்தில் அபிஷேக் தூக்கில் தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ந்து போன உறவினர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அபிஷேக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அபிஷேக் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
