'சார்வாள் பொண்ணுங்கள கூட்டிட்டு சுத்துறது 'பிஎம்டபிள்யூ' கார்ல'... 'காசிக்கே காட்பாதர் தினேஷ்'... 'ஆடிப்போன போலீசார்'... வெளியான அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 25, 2020 06:22 PM

நாகர்கோவில் காசி விவகாரத்தில் தோண்ட தோண்ட பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இவ்வளவு மோசடி மற்றும் கொடுமையான செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளார்களாக என போலீசாரே ஆடி போய் உள்ளார்கள்.

Shocking information revealed about Nagercoil kasi friend\'s dinesh

பொள்ளாச்சி சம்பவத்திற்குப் பிறகு, தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் தான் நாகர்கோவில் காசியின் வழக்கு. பெண்களுக்குத் தெரியாமல் ஆபாசமாகப் படம் எடுத்ததோடு, அதை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்த காசி, பெண் மருத்துவர் உள்பட பல்வேறு பெண்கள் போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில், காசி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் காசிக்கு உடந்தையாக இருந்த அவருடைய நண்பர் டேசன் ஜினோ என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு மேலும் இந்த வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்தது. தினம் தினம் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதாவது காசிக்கே காட்பாதர் தினேஷ் என்ற அளவில் அவர் செயல்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசாரையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தினேஷ், கோவையில் பட்டப்படிப்பை முடித்த கையோடு, தற்போது சென்னையில் சட்டப்படிப்பு படித்து வருவதாகக் கூறப்படுகிறது. காசி பெண்களை மிரட்டுவதற்கு தினேசை பயன்படுத்தி வந்துள்ளார்.

மேலும் வசதியான வீட்டு இளைஞர்களின் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட தினேஷ், பிஎம்டபிள்யூ காரில் தான் வலம் வருவாராம். அந்த காரில் இளம்பெண்களைப் பல இடங்களுக்கு இவர்கள் கூட்டிச் சென்றுள்ளார்கள். அப்போது அவர்களிடம் நெருக்கமாக இருக்கும் போது அதை ரகசியமாகப் படம் எடுத்து வைத்துக்கொண்டு, அவர்களிடம் பணம் பறிப்பது, மற்றும் தங்களது ஆசைக்கு இணங்க வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

மேலும் காசி, தினேஷ் மற்றும் அவர்களது கூட்டாளிகள் தங்களது திட்டத்துக்கு ஒத்துழைக்காத இளம்பெண்களை பல்வேறு வகைகளில் மிரட்டியும் உள்ளார்கள். இதனிடையே சில பெண்களின் வங்கிக் கணக்குகள் இவர்களது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டு இருந்த அதிர்ச்சி தகவலும் தற்போது வெளிவந்துள்ளது. தினேசின் முக்கிய கூட்டாளி ஒருவர் குறித்த முக்கிய தகவல் காவல்துறைக்கு தற்போது தெரியவந்துள்ளது.

அந்த நபரும் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீசார் கூறியுள்ளார்கள். மேலும் காசி, தினேசின் நண்பர்கள் சிலரையும் போலீசார் ரகசியமாகக் கண்காணித்து வருகின்றனர். எனேவ அடுத்தடுத்த நாட்களில் இன்னும் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shocking information revealed about Nagercoil kasi friend's dinesh | Tamil Nadu News.