போதும் 'லிஸ்ட்' பெருசா போய்கிட்டு இருக்கு...! இதுவரைக்கும் '50 பேரை' கண்டுபிடிச்சாச்சு...! - ஒரு பொண்ணுக்கு 'இப்படியெல்லாம்' கூடவா 'சோதனை' வரும்...?
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் டிக் டாக் பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அதிர வைக்கும் உண்மைகளை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் டி.என்.ஏ பரிசோதனையில் தனக்கு 50 சகோதர சகோதரிகள் உள்ளது எப்படி தெரிய வந்தது என கூறியுள்ளார்.

2018-ஆம் ஆண்டு அந்த இளம்பெண், தனது குடும்ப பூர்வீகம் குறித்து தெரிந்து கொள்வதற்காக டி.என்.ஏ எனப்படும் மரபணு பரிசோதனையை செய்துள்ளார். அதன் முடிவில் அவர் எதிர்பார்த்தது போலவே தான் ஒரு இத்தாலி பெண் கிடையாது என்பது உறுதியானது.
ஆனால், அந்த சோதனை முடிவு கிடைத்த பிறகு தான் பிரச்சனை தொடங்கியது. சில தினங்களில் இந்த இளம்பெண்ணை தொடர்பு கொண்ட பெண்மணி ஒருவர் என்னுடைய மகளுக்குள், உங்களுக்கு ஒரே டி.என்.ஏ தான் இருக்கிறது என கூறியிருக்கிறார்.
ஆனால், தான் ஒரு மரபணு கொடையாளர் மூலம் பிறந்த குழந்தை என அந்த டிக் டாக் பிரபலத்துக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்மணி கூறியவாறு அவருடைய மகளும், தானும் ஒரே விந்தணு கொடையாளர் மூலம் பிறந்த சகோதரிகளாக இருக்கலாம் என சந்தேகமடைந்தார்.
இது தவிர அந்த டிக் டாக் பிரபலத்தின் தாய் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்தவர் என்பதால் அவரது சகோதரிகள் நான்கு பேர் ஆயினர்.
இவர்களை தவிர வேறு யாரேனும் மரபணு ரீதியில் சகோதர்கள் உள்ளார்களா என அறிவதற்காக பிரைவேட் ஃபேஸ்புக் குரூப் ஒன்றை தொடங்கி தனது சகோதரிகளுக்கு லிங்கை அனுப்பி வைத்துள்ளார் அந்த டிக் டாக் பெண்.
இந்த ஃபேஸ்புக் குரூப்பின் மூலம் தனக்கு 50 சகோதர சகோதரிகள் இருப்பதை அறிந்து அவர் உச்சக்கட்ட அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருக்கிறதாம்.
தனது வீடியோவில் இந்த தகவல்கள் அனைத்தையும் தெரிவித்துள்ள அந்த பெண், மரபணு ரீதியிலான தன்னுடைய சகோதர, சகோதரிகளுடன் உறவை பகிர்ந்து கொள்ள பயமாக இருப்பதாகவும், ஒரு வேளை எதிர்காலத்தில் என்னுடைய அண்ணன், தம்பியுடன் டேட்டிங் போய்விடுவேனோ என பயமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
