3-வது தடவையும் ஆப்பிள் நிறுவனத்துக்கு அபராதம்..அப்படியென்ன தான் சிக்கல்?
முகப்பு > செய்திகள் > உலகம்பிரபல அமெரிக்க நிறுவனமான ஆப்பிளுக்கு மூன்றாவது முறையாக அபராதம் விதித்திருக்கிறது நெதர்லாந்து நாட்டின் கண்காணிப்புத்துறை. சமீப காலத்தில் தொடர்ந்து மூன்றாவது தடவையாக ஆப்பிள் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட இந்த அபராதம் தான் டிஜிட்டல் உலகில் தற்போதைய ஹாட் டாபிக்.
இப்படிதான் பணத்த எல்லாம் திருடுறாங்க.. வட கொரியா-வின் பலே பிளானை போட்டு உடைத்த ஐநா..!
என்ன சிக்கல்?
ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கும் டேட்டிங் அப்ளிகேஷன்களில் (dating apps) கட்டணம் செலுத்துவதற்கு ஆப்பிள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத சில பேமெண்ட் அப்ளிகேஷன்களையும் மக்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கவேண்டும் என ஆப்பிள் நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் ஆப்பிள் நிறுவனம் இந்த மாற்றத்தினை செய்யாத காரணத்தினால் நெதர்லாந்து நாட்டின் கண்காணிப்புக்குழு மூன்றாவது முறையாக 5.7 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்துள்ளது.
அதேபோல, நெதர்லாந்து நாட்டின் நுகர்வோர் மற்றும் சந்தை ஆணையம் (The Authority for Consumers and Markets) கடந்த ஜனவரி 15 ஆம் தேதி கண்காணிப்புக்குழு வெளியிட்ட நடைமுறையை பின்பற்றவில்லை என ஆப்பிள் நிறுவனத்திற்கு 5 மில்லியன் டாலர் தொகையை அபராதமாக விதித்திருந்தது.
விளக்கம் கேட்கும் அரசு
இந்த விவகாரம் குறித்து ஆப்பிள் நிறுவனம் தனது இணைய பக்கத்தில் விளக்கம் கொடுத்திருப்பதாக தெரிவித்திருந்தது. இருப்பினும் நுகர்வோர் மற்றும் சந்தை ஆணையம் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்," ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிக்கின்றன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் குறித்து ஆப்பிள் நிறுவனம் தெளிவான விளக்கத்தை அளிக்கத் தவறிவிட்டதாகவும் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
நெதர்லாந்து நாட்டின் சட்ட விதிமுறைகளை ஆப்பிள் நிறுவனம் மீறியுள்ளதாக அந்நாட்டு நீதிமன்றங்கள் முன்னரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கவலையில் முதலீட்டாளர்கள்
இதேபோல, சமீபத்தில் அமெரிக்க செனட் சபையும் பேமெண்ட் அப்ளிகேஷன் நிறுவனங்களிடமிருந்து ஆப்பிள் நிறுவனம் பெறும் கமிஷன் குறித்து கேள்வி எழுப்பியது அதுமட்டுமல்லாமல் இதுகுறித்து மசோதா ஒன்றும் செனட் சபையில் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு வகைகளில் ஆப்பிள் நிறுவனம் சட்ட சிக்கல்களை சந்திப்பது அதன் முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.