யம்மாடியோ...! 'ஒண்ணு ரெண்டு இல்ல...' 'மொத்தம் 27 மனைவிகள்...' 'ஒரு வருஷத்துல 12 குழந்தைகள்...' - மொத்த நம்பர கேட்டா தலையே சுத்திடும்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கனடா நாட்டின் கொலம்பியா மாகாணத்தில் பவுண்டிஃபுல் பகுதியில் வாழ்ந்து வருபவர் 64 வயதாகும் வின்ஸ்டன் பிளாக்மோர் இவருக்கு 27 மனைவிகள், 150 குழந்தைகள், இவரின் குடும்பம் தான் கனடாவின் பெரிய குடும்பமாக கருதப்படுகிறது. இதுவரை வெளி உலகுக்கு தெரியாத வின்ஸ்டன் பிளாக்மோரின் குடும்பம் குறித்து அவரின் மகனும் தற்போது அமெரிக்காவில் வசிக்கும் மெர்லின் பிளாக்மோர் (19) தன்னுடைய டிக் டாக்கில் தனது குடும்பத்தினர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை புகைப்படங்களுடன் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அனைவருமே ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். தங்களின் சொந்த அம்மாவை ஆங்கிலத்தில் "mum" என்றும் அப்பாவின் பிற மனைவியர்களை "Mother" என அழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது தந்தையின் 27 மனைவிகளில் 22 பேருக்கு மட்டுமே அவருடன் குழந்தைகள் இருப்பதாகவும் மெர்லின் பிளாக்மோர் தெரிவித்துள்ளார். பிற சகோதர, சகோதரிகளை போல நாங்கள் சண்டையிட்டுக்கொள்வதில்லை மாறாக நாங்கள் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் பாசமாக வளர்ந்து வருவதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இதை அனைத்தையும் விட மிகுந்த சுவாரஸ்யமான தகவலாக தனது அப்பா வின்ஸ்டன் பிளாக்மோர் திருமணம் செய்த 27 பெண்களில், அக்கா - தங்கைகள் ஜோடி மட்டும் 4 இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ஒரே தாய் வயிற்றில் பிறந்த 3 சகோதரிகளையும் தனது தந்தை திருமணம் செய்துள்ளார்.
இதைவிட ஒருபடி மேலாக, ஒரே ஆண்டில் 12 குழந்தைகள் பிறந்ததாகவும், அவர்கள் 12 பேருக்குமே "M" என ஆங்கிலத்தில் தொடங்கும் வார்த்தையில் தான் பெயர் வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பெரிய குடும்பம் என்பதால் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே தோட்டம் அமைத்து அறுவடை செய்வதாகவும், விவசாய நிலங்களில் அனைவரும் ஒன்றுக்கூடி வேலை செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த குடும்பம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.