'மிஸ் யூ பேபி'ன்னு காதலன் அனுப்பிய செல்ஃபீ'... 'போட்டோவை பார்த்து ஆடிப்போன காதலி'... துரோகத்தால் கையும் களவுமாக சிக்கிய காதலன்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Nov 05, 2020 04:19 PM

உன்னை நிறைய மிஸ் பண்றேன் எனக் காதலன் தனது காதலிக்கு அனுப்பிய புகைப்படத்தை வைத்தே இது நாள் வரை காதலன் தனக்குச் செய்து வந்த துரோகத்தை இளம்பெண் கண்டுபிடித்துள்ளார்.

woman discovered her boyfriend of four years was cheating

Kinsch என்ற இளம்பெண் டிக் டாக்கில் தனது காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாகப் பதிவிட்டிருந்த வீடியோ பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பார்க்கப்பட்டது. அதில் தனக்கு நடந்த சோக சம்பவம் குறித்து அந்த இளம்பெண் விவரித்துள்ளார். Kinschயின் காதலன் காரில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது Kinsch அவருக்கு போன் செய்து பேசி கொண்டிருந்த நேரத்தில் அவரது காதலன், நான் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் எனக் கூறியுள்ளார். உடனே Kinsch உன்னை உடனே பார்க்க வேண்டும் போல இருக்கிறது, உடனே ஒரு செல்ஃபீ எடுத்து அனுப்பு எனக் கூறியுள்ளார்.

அப்போது Kinschயின் காதலன் காரை ஓட்டிக் கொண்டு இருந்துள்ளார். ஆனால் காதலி கேட்டதால் அவரும் காரை ஓட்டிக் கொண்டே ஒரு புகைப்படத்தை எடுத்து Kinschக்கு அனுப்பி வைத்துள்ளார். காதலனிடம் இருந்து வந்த புகைப்படத்தை Kinsch ஆசையாகப் பார்த்து போது தான் அவருக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. Kinschயின் காதலன் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு அந்த செல்ஃபீயை எடுத்த நிலையில், அதில் தெளிவாக ஒரு பெண் அமர்ந்திருப்பது அவரது கூலிங் கிளாஸில் தெரிந்தது.

woman discovered her boyfriend of four years was cheating

தான் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்து உடைந்து போன Kinsch, அந்த பெண்ணும் தனக்குத் தெரிந்தவர் என்பதால் இன்னும் கலங்கிப் போனார். காரில் அமர்ந்திருந்த பெண் Kinsch மற்றும் அவரது காதலனுக்குத் தெரிந்த நபரின் காதலி ஆகும். அந்த ஆண் நண்பருக்குக் கிட்டத்தட்ட 5 காதலிகள் உள்ளனர். 4 வருடங்களாகத் தனது காதலன் தன்னை ஏமாற்றி வந்த விஷத்தை அவர் அப்போது தான் கண்டுபிடித்தார். இதனால் ஆத்திரம் தாங்காமல் தனக்குள் இருந்த சோகத்தைச் சமூகவலைத்தளங்களில் போட்டுடைத்தார்.

தனது காதலன் தன்னை எவ்வாறு ஏமாற்றினார் என்பதையும், தான் அந்த கண்ணாடியை வைத்து எப்படிக் கண்டுபிடித்தேன் என்பதையும் அவர் அதில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த பலரும் Kinschக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Tags : #CHEATING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman discovered her boyfriend of four years was cheating | World News.