டேட்டிங் பண்ற பொண்ணோட முதல்நாள் ‘அவுட்டிங்’.. திடீர்னு GIRLFRIEND வச்ச ஒரு ‘ட்விஸ்ட்’.. மிரண்டு போன வாலிபர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்முதல் டேட்டிங்கிற்கு தோழியுடன் சென்ற இளைஞர் ஒருவர் ஓட்டல் பில்லை பார்த்து மிரண்டு ஓடிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் 23 வயது இளம்பெண் ஒருவர் 29 வயது இளைஞருடன் டேட்டிங் செய்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இருவரும் முதல் முறையாக அவுட்டிங் செல்ல முடிவெடுத்துள்ளனர். அப்போது அன்றைக்கு ஆகும் செலவு அனைத்தையும் அந்த இளைஞரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அந்த இளம்பெண் நிபந்தனை விதித்துள்ளார்.
இது அந்த இளைஞரின் தாராள மனதை சோதனை செய்வதற்காக அப்பெண் டெஸ்ட் வைத்துள்ளார். இதனை அறியாத இளைஞரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் டேட்டிங் தினத்தன்று ஓட்டல் ஒன்றில் தோழியின் வருகைக்காக அந்த இளைஞர் காத்திருந்துள்ளார்.
அப்போது இளைஞருக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தனது உறவினர்கள் 23 பேரை அந்த இளம்பெண் டேட்டிங்கிற்கு உடன் அழைத்து வந்துள்ளார். அவர்கள் அனைவரும் தங்கள் விரும்பம் போல மதுபானம், உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். கடைசியாக ஓட்டல் மேலாளர் சாப்பாடு மற்றும் மதுபானத்துக்கான பில்லை எடுத்து வந்துள்ளார். அந்த பில்லை இளைஞரிடம் கொடுக்குமாறு மேலாளரிடம் அப்பெண் தெரிவித்துள்ளார்.
அந்த பில்லை பார்த்த இளைஞர் அப்படியே ஷாக்கில் உறைந்துள்ளார். ஏனென்றால் அந்த பில்லின் தொகை 19,800 யுவான். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.18 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் யாரிடமும் சொல்லாமல் தப்பித்தோம், பிழைத்தோம் என பில்லை கட்டாமல் அங்கிருந்து இளைஞர் தப்பி ஓடியுள்ளார். இதன்பின்னர் அந்த இளைஞரை தொடர்பு கொண்ட இளம்பெண், பில்லை அவரது உறவினர்களுடன் பகிர்ந்து செலுத்தலாம் என கூறி பிரச்சனை முடித்து வைத்துள்ளார்.

மற்ற செய்திகள்
