எல்லாத்துக்கும் ‘காரணம்’ அவங்கதான்னு சொல்லிட்டு.. கடைசியில நீங்களே அங்க ‘அக்கவுண்ட்’ வச்சிருக்கீங்க.. வெளியான ‘பரபரப்பு’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனா வங்கியில் கணக்கு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் ஊடரங்கு விதிக்கப்பட்டிருந்த சமயத்தில், சீனாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். கொரோனா பரவியதற்கு சீனாவே காரணமென்றும், இதற்கு சீனா கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்தார். மேலும் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக யுத்தத்தை தூண்டி விட்டார்.
இந்த நிலையில் டிரம்பின் தனிப்பட்ட மற்றும் நிறுவனத்தின் நிதி விவரங்கள் குறித்த ஆவணத்தை பிரபல ஊடகமான நியூயார்க்ஸ் டைம்ஸ் பெற்றுள்ளது. அதில், டிரம்ப் சீனா வங்கியில் கணக்கு வைத்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. டிரம்ப் அமெரிக்க அதிபரானபோது, 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் அமெரிக்க கூட்டாட்சி வரி மற்றும் சீன வங்கிக் கணக்கு உள்ளூர் வரியையும் செலுத்தியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்தில் இந்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
