'அது ஒன்னுதான் இருக்க நம்பிக்கை'... 'ஆனா தடுப்பூசி வர்றதுக்கு முன்னாடியே'... 'இங்க நிலைம'... 'ஷாக் கொடுத்துள்ள WHO!!!'...
முகப்பு > செய்திகள் > உலகம்உலகளவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருவதற்குள் கொரோனா பாதிப்பு நிலை எப்படி இருக்கும் என்பது குறித்து WHO அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.

உலகளவில் தடுப்பூசி பரவலாகப் பயன்பாட்டிற்கு வரும் முன் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை தற்போதுள்ளதை விட இரு மடங்காக அதாவது 2 மில்லியனாக உயரக்கூடும் எனவும், தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லாமல்போனால் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் எனவும் UN ஏஜென்சியுடைய அவசரகால திட்டத்தின் தலைவர் மைக் ரியான் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்துப் பேசியுள்ள அவர், "சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து சுமார் ஒன்பது மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை நெருங்குகிறது. உலகெங்கிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், நோய்ப்பரவலை இளைஞர்கள் அதிகரிக்கிறார்கள் என குற்றம் சாட்டக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உலகளவில் கொரோனா தடுப்பூசிகள் விரைவாகவும், அனைவருக்கும் சமமாகவும் கிடைப்பதை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்ட கோவாக்ஸ் திட்டத்தில், அதன் சாத்தியமான ஈடுபாடு குறித்து சீனாவுடன் தொடர்ந்து WHO பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
