'இவங்க தான் ஆரம்பிச்சு வச்சாங்க... இப்போ இவங்களே தான் முடிக்கப் போறாங்க போல'!.. கொரோனா தடுப்பு மருந்து குறித்து... சீனா 'அதிரடி' அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி நவம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தடுப்பூசியை விரைவாக கண்டுபிடிப்பதை விட, அது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்திருந்தது.
இந்நிலையில், சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. நான்கு தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையை அடைந்து விட்டதாகவும், அதில் மூன்று தடுப்பூசிகள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு கடந்த ஜூலை மாதத்தில் அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இதுதொடர்பாக அந்த மையத்தின் தலைமை வல்லுநர் Guizhen Wu கூறுகையில், "சோதனையில் இருக்கும் கொரோனா தடுப்பூசி ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் எனக்கு போடப்பட்டது. அதன்பிறகு, மோசமான பக்கவிளைவுகளோ அல்லது அறிகுறியோ எனக்கு ஏற்படவில்லை" என்று கூறியுள்ளார். ஆனால், அந்த தடுப்பூசியின் பெயர் குறித்த தகவல்களை அவர் வெளியிடவில்லை.

மற்ற செய்திகள்
