'ஆசையா கணவாய் மீன் வாங்கிய சீன மக்கள்...' யாரெல்லாம் கணவாய் வாங்குனீங்க...? 'உடனே கொரோனா செக் பண்ணுங்க என அலெர்ட்...' - மறுபடியும் சீனாவிற்கு ஷாக்...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் மீண்டும் கணவாய் மீன்கள் மூலம் கொரோனா பரவும் அபாயம் உள்ளது என சீன விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸின் ஆதிக்கம் இதுவரை குறைந்தபாடில்லை.
மேலும் கடந்த சில மாதங்களாகவே சீனாவில் கொரோனா பரிசோதனைகளும் துரிதப்படுத்திவருகின்றனர். மேலும், சீனாவில் இறக்குமதி ஆகும் பொருட்களில் இருந்தும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து வரும் கடல் உணவுகள், இறைச்சி உள்ளிட்டவற்றை சீனா தீவிரமாக பரிசோதித்து வருகிறது.
தற்போது, சீனாவின் வடகிழக்கு ஜிலின் மாகாணத்தில் உள்ள ஃபுயு நகரில் இறக்குமதி செய்யப்பட்ட கணவாய் மீன் பேக்கேஜிங்கில் கொரோனா வைரஸ் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் சந்தைகளில் கணவாய் மீன்கள் வாங்கிய மக்களை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட கணவாய் மீன்கள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய சீன சுங்கத் துறை, இனி இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தட்ட நிறுவனங்கள் இறக்குமதி செய்ய ஒரு வார காலம் தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
