'கல்லறைக்கு அடியில இருந்த வெண்கல கூஜா...' '2000 வருசத்துக்கு முன்ன வச்சது...' அப்படி என்ன உள்ள இருந்துச்சு...? - ஆய்வில் தெரிய வந்த வியப்பூட்டும் தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான மதுவை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சீனாவில் உள்ள சன்மென்ஷியா நகரில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆய்வின்போது வெண்கலப் பாத்திரம் ஒன்று கிடைத்துள்ளது. அதை திறந்து பார்த்தால் அதிர்ச்சி ஆகி உள்ளனர். ஏனெனில் அதில் இருந்தது ரெண்டாயிரம் வருடங்களுக்கு முன் அடைத்து வைக்கப்பட்ட மது என தெரிய வந்தது.
இது சீனாவின் ஹான் பேரரசு கால கட்டத்தைச் சேர்ந்த மது என கண்டறிந்துள்ளனர். இந்த மது மருத்துவ காரணங்களுக்காக தயாரிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த மதுவில் அபாயகரமான விஷ நச்சுகள் எதுவும் இல்லை என்பது தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ரெண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய பழமையான கல்லறை ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த மது அருந்தும் தன்மை கொண்டதா என்பது பற்றிய விவாதங்கள் தற்போது எழ தொடங்கியுள்ளன.

மற்ற செய்திகள்
