'CSKவுக்கு சாதகமாகும் போட்டியின் போக்கு!!!'... 'மும்பையுடன் மோதுவதற்கு முன்பே'... 'அடுத்தடுத்த திருப்பங்களால் கிடைத்துள்ள புது நம்பிக்கை!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசாம்பியன் அணியான மும்பையுடன் மோதுவதற்கு முன்பே சென்னைக்கு பிளே ஆப் நம்பிக்கையை தரும் வகையில் போட்டியின் போக்கு மாறி வருகிறது.
ஐபிஎல்லில் இதுவரை விளையாடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆப் சென்ற ஒரே அணி என்ற பெருமையைப் பெற்றுள்ள சிஎஸ்கே தொடர் சொதப்பலால் இந்த ஆண்டு அதையே இழக்கும் நிலையில் உள்ளது. பிளே ஆப் செல்ல வேண்டுமென்றால் இனி அடுத்து விளையாடப்போகும் அனைத்து போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ள சூழலில் அந்த அணிக்கு நம்பிக்கை தரும் வகையில் தற்போது போட்டியின் போக்கு மாறி வருகிறது. மும்பை அணியுடன் மோதுவதற்கு முன்பே அடுத்தடுத்து நடந்த 3 திருப்பங்கள் சிஎஸ்கேவிற்கு ஆதரவாக அமைந்துள்ளது.
முதலில் கொல்கத்தா பெங்களூர் அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியில் மிக மோசமான ரன் ரேட் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வி அடைந்தது. இதையடுத்து ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் தற்போது கொல்கத்தா அணி 5 வெற்றிகளுடனும், மோசமான ரன் ரேட் உடனும் உள்ளதால் இனி வரும் போட்டிகளில் கொல்கத்தா தோல்வி அடைந்தால் அந்த அணி பிளே ஆப் வாய்ப்பை கூட இழக்க வாய்ப்புள்ளது. அத்துடன் கொல்கத்தா அணியில் நரேன், ரசல் ஆட முடியாத நிலையில் இருப்பதால் அந்த அணிக்கு அது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இரண்டாவதாக, நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி ஹைதராபாத்திடம் தோல்வி அடைந்ததையடுத்து புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப், ஹைதராபாத், ராஜஸ்தான் என்று மூன்று அணிகளும் 8 புள்ளிகளுடன் உள்ளது. அதனால் இன்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற்றால் சிஎஸ்கே அணியும் 8 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கான ரேஸில் சேரும். இதனால் இன்று நடக்கும் மும்பைக்கு எதிரான போட்டியில் வென்றால் சிஎஸ்கேவிற்கு அது மிகவும் சாதகமாக அமையும்.
மூன்றாவதாக, தற்போது சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் சில முக்கியமான வீரர்கள் ஆட வாய்ப்பு இல்லை என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பை அணியில் முக்கியமான சில வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் அந்த அணியில் இன்று நிறைய மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை ரோஹித் சர்மாவே ஆட முடியாமல் போக வாய்ப்புள்ளதால் அதன்காரணமாகவும் சிஎஸ்கே அணிக்கு இன்று வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது.