'எங்க கொரோனா உருவாச்சுன்னு என்கிட்ட PROOF இருக்கு...' 'இத மறைக்க அவங்களும் துணை...' - சீன டாக்டர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கொரோனா பரவியதை குறித்து மறைப்பதற்கு உலக சுகாதார மையம் துணை இருந்ததாக சீன வைராலஜிஸ்ட் டாக்டர் கூறிய சம்பவம் மீண்டும் உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வைராலஜிஸ்ட் மருத்துவரான லி மெங்-யான் என்பவர் சீனாவில் இருந்து அமெரிக்கா சென்ற்றுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் இருக்கும் அவர் வெளியிட்ட செய்தி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 9 மாதங்களாக உலகமே தன் இயல்பு நிலையை மறக்க காரணமாகிய கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் கட்டுக்குள் அடங்காமல் உலக மக்களின் உயிரை காவு வாங்கிக்கொண்டு உள்ளது.
கொரோனா பரவிய காலம் முதல் சீனா அரசு வைரஸ் குறித்து மறைத்து வந்ததாகவும், தகுந்த முன்னெச்சரிக்கை கொடுக்கவில்லை என பல உலக நாடுகள் கூறி வந்தன. தற்போது அதை உண்மையென கூறியுள்ளார் சீன வைராலஜிஸ்ட் மருத்துவரான லி மெங்-யான்.
மேலும் சீனா, வூஹான் இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக கூறியது என்ற அறிவிப்பையும் எதிர்த்துள்ளார் லி மெங்-யான்.
சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த மருத்துவர் லி மெங்-யான் கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கும் போது, 'கொரோனா வைரஸ், சீன ஆய்வகத்தில் இருந்து தான் தயாரிக்கப்பட்டது, இதற்கான ஆதாரங்கள், அறிவியல் ரீதியான சான்றுகள் எல்லாம் என்னிடம் உள்ளது. கொரோனா வைரஸ் குறித்து சீன அதிகாரிகளிடம் எச்சரித்தபோது, அதனை அவர்கள் கேட்கவில்லை.
அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் உலக மக்களுக்கு பரவும் முன்பே அதுகுறித்தான செய்திகள் எல்லாம் சீன அரசிற்கு தெரியும். மேலும் உலக சுகாதார நிறுவனம் இதனை மறைக்க சீன அரசாங்கத்திற்கு உதவியது' என கடந்த 22-ம் தேதி லீ மெங் யான் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
