'சீனால ஒரு பாக்டீரியா தொற்றும் ஏற்கனவே பரவிருக்கு...' 'இது எப்படி பரவுதுன்னும் கண்டுபிடிச்சாச்சு...' 'இதுவரை 3,245 பேர் பாதிப்பு...' - அதிர்ச்சி ரிப்போர்ட்...!
முகப்பு > செய்திகள் > உலகம்வடமேற்கு சீனாவில் கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான மக்களுக்கு ப்ரூசெல்லோசிஸ் என்ற பாக்டீரியா நோய்த் தொற்று பரவியுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் சீனாவின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு உயிர் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து கசிந்த ப்ரூசெல்லா என்ற பாக்டீரியாவால் சுமார் 3,245 பேர் புருசெல்லோசிஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கன்சு மாகாணத்தின் தலைநகரான லான்ஷோவின் சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.
குளோபல் டைம்ஸ் அறிக்கையின்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 20 வரை, லான்ஜோ கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அருகில் அமைந்துள்ள ஜாங்மு லான்ஜோ உயிரியல் மருந்து தொழிற்சாலையில் விலங்குகளின் பயன்பாட்டிற்காக புருசெல்லா தடுப்பூசி உற்பத்தியில் காலாவதியான கிருமிநாசினியைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
இந்த புருசெல்லோசிஸ் தொற்றானது கால்நடைகள் மற்றும் செம்மறி ஆடுகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட கால்நடைகளுடன் தொடர்புடைய மனிதர்களுக்கு பரவுவதாகவும், இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், உடல்நலக்குறைவு மற்றும் தலைவலி ஆகியவை ஏற்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
புருசெல்லோசிஸ் தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்காவிட்டால் மரணத்திற்கு வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். லான்ஜோ கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ளவர்கள் கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் முதல் இந்த தொற்றுநோய்கள் குறித்து புகாரளிக்கபட்டதாக சீன அரசு செய்தி நிறுவனம் சின்ஹுவா தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட சுமார் 181 பேர் புருசெல்லோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
