"7 வருசமா இந்த BUILDING கீழ தான் இருந்துருக்கு".. அடித்தளத்தில் இருந்த விஷயம்.. பீதியில் உறைந்த தொழிலாளர்கள்!!
முகப்பு > செய்திகள் > உலகம்அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் அடித்தளத்தில் 7 ஆண்டுகளாக இருந்த விஷயம் ஒன்று போலீசாரை திடுக்கிட வைத்துள்ளது.

Also Read | அண்ணாத்த ஆடுறார்.. மேட்ச்-ல ஜெயிச்ச அப்புறம் கோலி போட்ட குத்தாட்டம்.. கூட யாருன்னு பாருங்க.. வீடியோ..!
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் பகுதியை அடுத்த Alderley என்னும் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது.
இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் சுத்தம் செய்பவர்கள் வேலை செய்த போது அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.
அங்கே அமைந்திருந்த செங்கல் சுவர் ஒன்றின் பின்னால், பிளாஸ்டிக் பேக் மூலம் சுற்றப்பட்டு பாதி புதைக்கப்பட்ட அளவில் பெண்ணின் உடல் ஒன்று இருந்ததை கண்டு அதிர்ந்து போயுள்ளனர். உடனடியாக இது பற்றி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் சம்பவ இடம் வந்து விசாரணையையும் மேற்கொண்டனர்.
இது தொடர்பாக நடந்த விசாரணையில் அந்த பெண் யார் என்பதை இன்னும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றது. பெண்ணின் உயரம், வயது உள்ளிட்ட விஷயங்கள் பரிசோதனையில் தெரிய வந்துள்ள நிலையில், இன்னும் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களும் கிடைத்துள்ளது. அதன்படி, அந்த பெண்ணின் உடலில் காயம் இருப்பதாகவும், இது சந்தேகத்திற்குரிய மரணம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 ஆண்டில் அந்த பெண் இறந்திருக்கலாம் என்றும், 2015 ஆம் ஆண்டு முதல் இந்த கட்டிடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருத்தப்படுகிறது. அதே வேளையில் இந்த கட்டிடத்தில் வைத்து கொலை செய்தார்களா அல்லது வேறு இடத்தில் வைத்து கொலை செய்து விட்டு இங்கே கொண்டு வைத்தார்களா என்பதும் சந்தேகமாகவே இருப்பதாக தெரிகிறது.
7 ஆண்டுகளாக ஒரு பெண்ணின் உடல் கட்டிடத்திற்கு அடியே யாருக்கும் தெரியாமல் இருந்து தற்போது இது பற்றி தகவல் வெளியாகி, அப்பகுதி மக்கள் பலரையும் திகிலூட்ட வைத்துள்ளது. இது தொடர்பாக போலீசாரும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், முதலில் அந்த பெண் யார் என்பதை அடையாளம் காணவும் தீவிரமாக போலீசார் இறங்கி உள்ளனர். மேலும், அந்த கட்டிடத்தில் தற்போது இருக்கும் நபர்கள் மற்றும் முன்பு தங்கியிருந்தவர்கள் பட்டியலை எடுத்தும் அவர்களை விசாரித்து வருவதாக தெரிகிறது.
Also Read | இப்படியா சாப்பாடு போடுவீங்க.. காதலன் வீட்டில் அளித்த விருந்தால் 'பிரேக் அப்’ பண்ணிய காதலி.!

மற்ற செய்திகள்
