எதே பொண்ண திருட போறாரா?.. கல்யாணத்துக்கு கட்-அவுட் வச்ச உயிர் நண்பர்கள்.. அந்த பின் குறிப்ப பார்த்துத்தான் எல்லோரும் சிரிச்சிட்டாங்க..😂

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Nov 07, 2022 08:42 PM

ராசிபுரம் அருகே இளைஞரின் திருமணத்திற்கு அவரது நண்பர்கள் வைத்திருந்த பேனர் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

Friends Placed Unique Flex Banner for Marriage in Vadugam

Also Read | பெண் குழந்தை பிறந்தா 1 ரூபா கூட மருத்துவ கட்டணம் கிடையாதா.? இந்தியாவுல இப்படி ஒரு டாக்டரா..?

கல்யாணம் என்பதே பல்வேறு சடங்குகளை உள்ளடக்கியது. வரன் பார்ப்பது துவங்கி, அடுத்தடுத்து ஏகப்பட்ட வேலைகள் அணிவகுத்து நிற்கும். சமீப ஆண்டுகளில் திருமணத்தை ஒட்டி பல்வேறு புதிய புதிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது பேனர்கள். கட்-அவுட் வைத்தால் தான் கல்யாண கலையே கட்டும் எனும் அளவுக்கு அவை பிரபலமாகிவிட்டன. சில சமயங்களில் மக்கள் தங்களுடைய வித்தியாசமான சிந்தனைகளை புகுத்தி அடிக்கும் பேனர்கள் சமூக வலை தளங்களில் வைரலாவதும் உண்டு.

Friends Placed Unique Flex Banner for Marriage in Vadugam

அந்த வகையில் ராசிபுரம் அருகே, இளைஞர் ஒருவருடைய திருமணத்திற்கு அவருடைய நண்பர்கள் வைத்திருந்த பேனர் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள வடுகம் கிராமத்தில் தான் இந்த விநோத பேனர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கிராமத்தை சேர்ந்த சௌந்தர் என்பவருக்கும் காயத்ரி என்பவருக்கும் இன்று (நவம்பர் 7) திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதனை முன்னிட்டு மாப்பிள்ளையின் நண்பர்கள் ஊருக்குள் பேனர் ஒன்றை வைத்திருக்கின்றனர்.

Friends Placed Unique Flex Banner for Marriage in Vadugam

அதில், வடுகத்தில் பரபரப்பு என தலைப்போடு துவங்கும் இந்த பேனரில் மணமக்களின் புகைப்படம் ஒருபக்கம் அமைந்திருக்கிறது. மற்றொரு பகுதியில், வாலிபர் கைது என்று குறிப்பிட்டுள்ளதோடு, அதற்கான காரணம் பெண்ணின் மனதை திருடியது என்றும், மூன்று முடிச்சு போடுவது ஆயுள் தண்டனை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மணமகளை கைது செய்பவர் என்றும், மணமகனை கைது செய்யப்படுபவர் என்றும் குறிப்பிட்டுள்ள குசும்பு பிடித்த நண்பர்கள் இறுதியில்,"06.11.22 இன்று இரவு பெண் திருடும் எங்களின் நண்பனின் முதல் திருட்டு வெற்றிபெற வாழ்த்துகிறோம்" எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Friends Placed Unique Flex Banner for Marriage in Vadugam

பேனரில் வடுகம் வேங்கை பிரதர்ஸ் நண்பர்கள் குழு என அச்சடிக்கப்பட்டு அதன் கீழே இந்த பேனருக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை எனவும் போட்டிருக்கிறார்கள் மாப்பிள்ளையின் நண்பர்கள். இந்நிலையில் இந்த பேனரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Also Read | ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகும் கவிப்பேரரசு வைரமுத்துவின் பிரபல புத்தகம்..!

Tags : #FRIENDS #FLEX #FLEX BANNER #MARRIAGE #VADUGAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Friends Placed Unique Flex Banner for Marriage in Vadugam | Tamil Nadu News.