'கொரோனா பேஷண்ட் வார்டுல இருந்து எஸ்கேப் ஆயிருக்கார்...' 'ஆள கண்டுபிடிக்க பெரும் சவாலா இருக்கு...' அட்மிட் ஆகுறப்போவே பக்கா ப்ளானிங்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோயம்பேடு மார்க்கெட் பகுதியை சேர்ந்த இளைஞர் தப்பி ஓடிய சம்பவம் மருத்துவமனை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக கோயம்பேடு மார்கெட்டிற்கு சென்று வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மார்கெட்டிற்கு சென்று வந்த வியாபாரிகளையும், அங்கு வேலை செய்யும் மக்களையும் சுகாதார துறை விரட்டி விரட்டி பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் கோயம்பேடு மார்க்கெட்டும் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இரு நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இளைஞர் நேற்று நள்ளிரவில் தீடீரென மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இளைஞர் காணாமல் போனதை அறிந்த மருத்துவ நிர்வாகம் அருகில் இருக்கும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தேடுதல் வேட்கையில் இறங்கிய போலீசார் தப்பி ஓடிய இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்த இளைஞர் தன்னுடைய வீட்டு முகவரியை கொடுக்காமல் பொய்யான வேறொரு முகவரியை கொடுத்துள்ளது அவரை கண்டுபிடிப்பதில் சவாலாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே தப்பி செல்லும் எண்ணம் இருந்துருக்கலாம்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தப்பி ஓடிய இளைஞரால் மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதால், இந்த சம்பவம் மருத்துவமனை ஊழியர்களையும், சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மக்களையும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.