VIDEO: 'எல்லாரும் கண்ண மூடி பிரேயர் பண்ணிட்டு இருந்தப்போ...' 'சைலன்டா உள்ள வந்துருக்கு...' 'விட்டா போதும் என தெறிச்சு ஓடிய பொதுமக்கள்...' - கூலாக பாஸ்டர் செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்வழிதவறி வந்த முதலையை தேவாலயத்தின் பிரேயர் பகுதிக்கு அழைத்து சென்ற பாதிரியாரின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஜூன் 29-ஆம் தேதி, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் லே ஹைக் ஏக்கர்ஸ் பகுதியில் விக்டர் தேவாலத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது முதலை ஒன்று தேவாலயத்திற்குள் சென்றுள்ளது.
முதலையை பார்த்த அங்கிருந்த மக்கள் தலைத்தெறித்து ஓடும் போது, தேவலாயத்தில் இருந்த பாதிரியார் டேனியல் கிரிகோரி மட்டும் எவ்வித பதட்டமும் இல்லாமல் இருந்துள்ளார்.
அதோடு, தேவாலயத்தில் பல்வேறு பகுதிகளில் உலாவிய முதலையைப் பார்த்த டேனியல் கிரிகோரி அதன் அருகில் சென்று செல்பியும் எடுத்துக் கொண்டுள்ளார்
இதில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், தேவாலயத்துக்கு வருகை தந்த முதலைக்கு நன்றி தெரிவித்த பாதரியார் டேனியல், முதலையை தேவாலயத்தின் பிரேயர் பகுதிக்கு அழைத்து சென்று, தன்னுடைய பிஸினஸ் கார்ட் ஒன்றையும் அதற்கு கொடுத்தார்.
அதோடு இந்த சம்பவம் அனைத்தையும் வீடியோ பதிவு செய்து தன்னுடைய முகநூல் பக்கத்திலும் வெளியிட்டார்.
இந்த நிகழ்வு தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவின் வனத்துறை அதிகாரிகளும் பாதிரியார் டேனியலுக்கு கண்டனம் தெரிவித்தனர். பாதிரியார் டேனியல் செய்தது போன்று, புகைப்படம், வீடியோ போன்றவற்றை எடுக்க கூடாது என அறிவுரை கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்
