"'திருடன்-போலீஸ்' விளையாட வான்னு சொன்னா... 'வீடியோ' பாத்துட்டு இருக்கியா??" - அப்பா 'துப்பாக்கி'ய எடுத்து 'தம்பி'யோட பின்மண்டையில சுட்ட 'அண்ணன்'!!! - '9 வயது' சிறுவனுக்கு நடந்த ’கொடூரம்’!!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் தனது 9 வயது தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளான் சிறுவன்.
![us pennsylvania 13yr old boy kill brother with father\'s gun shot us pennsylvania 13yr old boy kill brother with father\'s gun shot](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/us-pennsylvania-13yr-old-boy-kill-brother-with-fathers-gun-shot.jpg)
அமெரிக்காவின் பெனிசில்வேனியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் பிராய்டென் பிரைட், தனது 9 வயது தம்பியுடன் திருடன் போலீஸ் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இருவரும் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், தம்பி விளையாட்டின் மீது ஆர்வம் காட்டாமல் யூ டியூபில் வீடியோவை ரசித்துக் கொண்டிருந்துள்ளான்.
இதனால் கோபமடைந்த சிறுவன் பிரைட், தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து தம்பியின் பின் மண்டையில் சுட்டுள்ளான். இதில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த சிறுவன், ரத்த வெள்ளத்தில் சரிய, பயத்தில் உறைந்து போன பிரைட், அவசர உதவி எண்ணுக்கு உடனடியாக அழைத்துள்ளான். ஆனால், மருத்துவக்குழுவினர் அங்கு வருவதற்குள் பிரைட்டின் தம்பி உயிரிழந்துள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக, 13 வயது சிறுவன் பிரைட்டை போலீசார் கைது செய்தனர். பிரைட்டை ஒரு சிறுவனாக கருதாமல், ஒரு வயதுக்கு வந்த நபராக கருதி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். காரணம், தனது தந்தையின் துப்பாக்கி
நிஜ துப்பாக்கி என்பதும், அதில் குண்டு இருந்த காரியமும் சிறுவனுக்கு தெரியும் என சிறுவன் போலீசாரிடம் கூறியுள்ளான். ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளை பிரைட் பெற்றோர்கள் பிரிந்துள்ள நிலையில், மீதமுள்ள மூன்று பெண் குழந்தைகளுக்கும் மனோதத்துவ நிபுணர்கள் கவுன்சிலிங் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)