அமெரிக்காவுல... 'ஜார்ஜ்'-க்கு நடந்த மாதிரியே திரும்ப நடந்துருக்கு... இந்தியரை காலால் இறுக்கி பிடித்த அமெரிக்க 'போலீஸ்'... வெடித்த போராட்டம்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கடந்த சில மாதங்களுக்கு கருப்பின இளைஞரான ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் போலீசாரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

இதற்கு அமெரிக்காவில் போலீசார் மற்றும் அரசுக்கு எதிராக வன்முறை வெடித்ததை தொடர்ந்து பல உலக நாடுகளும் இந்த சம்பவம் தொடர்பாக தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கும் நீதி கேட்டனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான அதிர்வலைகள் இன்னும் ஓயாத நிலையில், அமெரிக்காவில் அதே போன்று போலீசாரின் அடக்குமுறை மீண்டும் அரங்கேறியுள்ளது.
நியூயார்க் நகரை சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவரை அமெரிக்க போலீசார் கைது செய்ய முயன்றுள்ளனர். அப்போது சம்மந்தப்பட்ட அந்த நபரின் கழுத்தில், போலீசார் முழங்காலை வைத்து அழுத்தும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி மீண்டும் போலீசாருக்கு எதிரான குரலை எழுப்பியுள்ளது. அவரை கைது செய்த போலீசார், மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதில், அந்த நபர் உயிர் பிழைத்துக் கொண்டார். மேலும், அந்த நபரின் பெயர் யோகேஸ்வர் கெயிந்தர் பெர்சவுத் என்பது தெரிய வந்துள்ளது.
போலீசிடம் அவர் தப்பிக்க முயற்சிக்காமல் இருக்க வேண்டி தான் அப்படி செய்ததாகவும், அவருக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் செய்யவில்லை என சம்மந்தப்பட்ட போலீசார் விளக்கமளித்துள்ளார். எனினும், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாக நிலையில், ஜார்ஜ் மரணத்தை நினைவுபடுத்துவது போல் உள்ளதாக எர்மிகாவின் செனெக்டடே காவல் நிலையத்தின் முன் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது மீண்டும் அமெரிக்காவில் பதட்டமான ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
