'அடுத்த 24 மணி நேரத்திற்குள் முதல் தடுப்பூசி!!!'... 'அதுமட்டுமில்ல?!!'... 'அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!!!'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொரோனாவுக்கான முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அதிபர் டிரம்ப், "அமெரிக்காவில் அனைவருக்கும் பைசர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். பைசர் தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த எப்.டி.ஏ அனுமதி அளித்ததற்கு வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொரோனாவுக்கான முதல் தடுப்பூசி செலுத்தப்படும். மூத்த குடிமக்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும்" எனக் கூறியுள்ளார்.
— Donald J. Trump (@realDonaldTrump) December 12, 2020