'கொரோனா பாதிப்பால்'... 'பிரபல நிறுவனம் எடுத்துள்ள அதிரடி முடிவு?!!'... 'அதிர்ச்சி தரும் அறிவிப்பால் கலக்கத்தில் ஊழியர்கள்!!!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்கோக கோலா நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு அதிர்ச்சி தரும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனமான கோக கோலா அதன் மொத்த ஊழியர்களில் 17 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், உலகம் முழுவதிலுமான அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் தொகுப்பில் 17 சதவீதம் பேரை, அதாவது 2,200 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அந்நிறுவனத்தின் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்லாண்டாவை அடிப்படையாகக் கொண்ட கோக கோலா நிறுவனம் அதன் பணி நீக்கங்களில் பாதி அமெரிக்காவில் இருக்கும் எனவும் கூறியுள்ளது. அந்நிறுவனத்தில் மொத்தமாக 86,200 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களில் அமெரிக்காவில் 10,400 பேர் பணியாற்றுகின்றனர். கொரோனாவின் காரணமாக விற்பனை சரிந்துள்ள நிலையில் கோக கோலா நிறுவனம் இப்படியொரு முடிவினை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கொரோனா ஊரடங்கால் பல நாடுகளில் தியேட்டர்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளதால் அதன் விற்பனை பெரியளவில் முடங்கி, கடந்த செப்டம்பர் காலாண்டில் வருவாய் 9 சதவீதம் குறைந்து, 8.7 பில்லியன் டாலராக குறைந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ள நிலையில், தற்போது பணி நீக்கம் மட்டுமின்றி கோக கோலா அதன் பிராண்டுகளின் எண்ணிக்கையும் பாதியாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக டேப் (Tab), ஜிகோ தேங்காய் நீர் (Zico Coconut Water), டயட் கோக் (Diet Coke Fiesty Cherry), ஓட்வாலா ஜூஸ் (Odwalla Juices) உள்ளிட்ட குறைவாக விற்பனையாகி வரும் பிராண்டுகளை தனது லிஸ்டில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு மினிட் மெய்ட் உள்ளிட்ட வளர்ந்து வரும் புதிய தயாரிப்புகளை வளர்ச்சி பெற வைக்க இந்த சேமிப்பை அந்நிறுவனம் பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
