‘அப்டியே நிலாவுல மிதக்குற மாதிரி இருக்கு’.. வீட்டுக்கு வந்த ‘தங்கமகள்’.. பிறக்கும்போதே ‘வரலாறு’ படைத்த குழந்தை..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஒரு தம்பதி 27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு குழந்தை பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்தவர்கள் டினா-பென் கிப்சன் தம்பதியினர். டினா, சைபர் பாதுகாப்பு பகுப்பாய்வளராக வேலை பார்த்து வருகிறார். பென் கிப்சன் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இந்தநிலையில் கரு தத்தெடுப்பு பற்றி டிவியில் வந்த செய்தி ஒன்றின் மூலம் அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து இவர்கள் கரு தத்தெடுப்புக்காக அங்குள்ள தேசிய கரு தான மையத்துக்கு சென்றுள்ளனர். அங்கு பயன்படுத்தப்படாத கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் இப்படி பயன்படுத்தப்படாத 10 லட்சத்துக்கும் அதிகமான கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு இந்த தம்பதி அங்கு பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு கருவை தானமாக பெற்று அதன் மூலம் ‘எம்மா’ என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அந்த குழந்தைக்கு தற்போது 3 வயதாகிறது.
இந்தநிலையில் அந்த தம்பதியினர் மறுபடியும் கரு தானம் பெற்றுள்ளனர். இந்த கரு 27 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ளனர். இதன்மூலம் கடந்த அக்டோபர் மாதம் பென் கிப்சன் மற்றொரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த குழந்தைக்கு அவர்கள் ‘மோலி கிப்சன்’ என பெயர் சூட்டி உள்ளனர்.
அமெரிக்காவில் மிக நீண்டகாலம் உறைய வைத்து பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு குழந்தை பெற்றெடுத்திருப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது. இதுபற்றி கூறிய பென் கிப்சன், ‘நாங்கள் நிலவுக்கு மேலே இருப்பது போல சந்தோஷமாக இருக்கிறோம். இப்போது எங்களுக்கு ஒரு மகள் அல்ல, 2 மகள்கள்’ என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.