அம்மாடியோவ்..! இவ்வளத்தையுமா அமெரிக்கா விட்டுட்டு போய்ட்டாங்க.. ‘தலைசுற்ற வைக்கும் மதிப்பு’.. பீதியில் உலக நாடுகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா விட்டுச்சென்ற ராணுவ தடவாளங்களால் உலக நாடுகள் பீதியடைந்துள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டு அரசுக்கும் தாலிபான்களுக்கு இடையே கடந்த 20 ஆண்டுகளாக போர் நடைபெற்று வந்தது. அதில் ஆப்கான் அரசுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் உதவி வந்தது. இந்த நிலையில் ஆப்கானில் உள்ள அமெரிக்க படையை திரும்ப பெறுவதாக சமீபத்தில் அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
இதனால் வேகவேகமாக ஆப்கானின் முக்கிய நகரங்களை தாலிபான்கள் கைப்பற்ற ஆரம்பித்தனர். இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானை முழுவதுமாக தாலிபான்கள் கைப்பற்றினர். தற்போது அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக தாலிபான்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அமெரிக்க படைகள் ஆகஸ்ட் 31 நள்ளிரவுக்குள் வெளியேறி விட வேண்டும் என தாலிபான்கள் எச்சரிக்கை செய்தனர். ஆனால் இந்த கெடும் முடிவதற்கு 20 மணிநேரத்துக்கு முன்னதாகவே அமெரிக்க படைகள் அனைத்தும் ஆப்கானை விட்டு வெளியேறின.
இந்த நிலையில், 6 லட்சம் கோடி மதிப்புள்ள ராணுவ தடவாளங்களை ஆப்கானிஸ்தானிலேயே அமெரிக்கா விட்டுச்சென்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் 75,000 ராணுவ வாகனங்கள், 200-க்கும் மேற்பட்ட விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் 6,00,000-க்கும் அதிகமான துப்பாக்கிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 84 சதவீத நாடுகளிடம் இல்லாத Black Hawk ஹெலிகாப்டர்கள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விட்டுச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் தற்போது தாலிபான்கள் வசம் வந்துள்ளதால் உலக நாடுகள் பீதியில் உள்ளன.
இதுதொடர்பாக பேசிய அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி கென்னத் மெக்கன்சி, காபூலில் இருந்து அமெரிக்க படை வெளியேறுவதற்கு முன்னதாக 73 போர் விமானங்கள், நவீன ஏவுகணை தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை இயங்க முடியாத அளவிற்கு செயலிழக்க வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.