UAE தொடர்ந்து ‘க்ரீன் சிக்னல்’ காட்டிய நாடு.. நீக்கப்பட்டது தடை.. ஆனா ஒரு கண்டிசன்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகளை இங்கிலாந்து தளர்த்தியுள்ளது.
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு கொரோனா இரண்டாவது அலை அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு நாடுகள் இந்தியாவை சிகப்பு பட்டியலில் வைத்தது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணிகள் வர தடை விதித்தன.
அதேபோல் இங்கிலாந்தும் இந்தியாவை கொரோனா அதிகம் உள்ள நாடு (சிகப்பு பட்டியல்) என்ற பட்டியலில் வைத்திருந்தது. இரு நாடுகளுக்கும் இடையே ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. மேலும் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு சென்றால் ஹோட்டலில் 10 நாள்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.
இந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகளை இங்கிலாந்து அரசு தற்போது தளர்த்தியுள்ளது. அதன்படி முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போட்ட இந்திய பயணிகள் இங்கிலாந்து வரும்போது 10 நாள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டு இந்தியாவிலிருந்து வரும் அனைவரும் வீட்டிலோ அல்லது அவர்கள் குறிப்பிட்ட இடத்திலோ தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
இங்கிலாந்து சென்ற பின்னர் 2 முறை கொரோனா பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். இதற்காக முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், பயணிகள் இருப்பிடம் அறியும் லொகேட்டர் படிவத்தை நிரப்பி அளிக்க வேண்டும் என்றும் இங்கிலாந்து சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. முன்னதாக ஐக்கிய அரபு அமீரகமும் இந்திய பயணிகளுக்கான தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது.