VIDEO: ‘பசியோட கூட இருப்போம்’.. ‘ஆனா அதமட்டும் பண்ண மாட்டோம்’.. பரபரப்பை கிளப்பிய ‘ஜொமோட்டோ’ ஊழியர்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜொமோட்டோ நிறுவன ஊழியர்கள் அதன் டி-சர்ட்டை தீயிட்டு கொழுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த 2008ம் ஆண்டு ஹரியானாவில் ஜொமோட்டோ ஆன்லைன் உணவு விநியோக நிறுவனம் தொடங்கப்பட்டது. இதை பங்கஜ் சட்டா, திபீந்தர் கோயல் என்ற இருவர் சேர்ந்து ஆரம்பித்த இந்த நிறுவனம் தற்போது இந்தியாவின் முன்னணி உணவு சப்ளை நிறுவனமாக மாறியுள்ளது. இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு ஜொமோட்டோ நிறுவனத்தில் சீனாவின் அலிபாபா குழுமத்தின் ஆண்ட் ஃபினான்ஸியஸ் நிறுவனம் முதலீடு செய்தது.
தற்போது லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இதனால் நாடு முழுவதும் சீன நிறுவனங்களுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜொமோட்டோவில் சீன நிறுவனம் முதலீடு செய்ததை எதிர்த்து அந்நிறுவனத்தின் ஊழியர்கள் 60-க்கும் மேற்பட்டோர் பணியிலிருந்து விலகியுள்ளனர். மேலும் ஜொமோட்டோ நிறுவன டி-சர்ட்டை தீயிட்டுக் கொழுத்தினர்.
While people are losing jobs all around, a group of #Zomato delivery boys in #Kolkata quit their job protesting against #Chinese investment in the company #IndiaChinaFaceOff #BoycottChineseProduct #BoycottMadeInChina pic.twitter.com/I0R6heusZO
— Indrajit | ইন্দ্রজিৎ (@iindrojit) June 27, 2020
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் தீபக் கஞ்சாலி கூறியதாவது, ‘நாங்கள் இந்த நிறுவனத்தை புறக்கணிப்பது போல மக்களும் ஜொமோட்டோவை புறக்கணிக்க வேண்டும். நாட்டுக்காக பசியுடன் இருப்பமே தவிர துரோகம் இழைக்க மாட்டோம். நமது பணத்தை பயன்படுத்தியே நமது ராணுவத்தினரை கொல்ல அனுமதிக்கலாமா? இன்று முதல் நாங்கள் 60 பேர் பணியிலிருந்து விலகுகிறோம். ஜொமோட்டோ ஆப்பை எங்கள் செல்போனில் இருந்து அழித்து விட்டோம்’ என தெரிவித்துள்ளார்.