VIDEO: பாதுகாப்பு வாகனங்களை நிறுத்தி... ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட ஜெகன் மோகன் ரெட்டி!.. கான்வாய் புடைசூழ... சாலையில் நெகிழ்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசாலை விபத்தில் பலத்த காயமடைந்த நபரை கொண்டுசென்ற ஆம்புலன்ஸ் செல்வதற்காக தனது பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களை நிறுத்தியுள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
![andhra pradhesh cm jagan mohan reddy stops convoy for ambulance andhra pradhesh cm jagan mohan reddy stops convoy for ambulance](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/andhra-pradhesh-cm-jagan-mohan-reddy-stops-convoy-for-ambulance.jpg)
நேற்று மதியம் சபர்தினா சேகர் என்ற நபர் வொய்யாறிலிருந்து கன்னாவரத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, சாலை விபத்து ஏற்பட்டது. விபத்தில் பலத்த காயமடைந்த அவரை விஜயவாடாவில் இருக்கும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றுள்ளனர்.
அந்த நேரத்தில் விஜயவாடா விமான நிலையத்திலிருந்து தடேபள்ளியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆம்புலன்ஸ் செல்வதற்காக தனது பாதுகாப்பு வாகனங்களை நிறுத்தி வழிவிட்டிருக்கிறார்.
ஜெகன் ரெட்டி தனது அப்பா ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியின் 11ஆம் ஆண்டு நினைவுநாளில் அவருடைய நினைவிடமான புலிவேண்டுலாவிற்கு சென்றுவிட்டு தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஒய்.எஸ்.ஆர் முதலமைச்சராக இருந்தபோதுதான் 108 ஆம்புலன்ஸ் சேவையை வெற்றிகரமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#AndhraPradesh CM Jagan Mohan Reddy's convoy makes way for ambulance | Track latest news updates here https://t.co/ivCvgu72u9 pic.twitter.com/pxnWSQK9gY
— Economic Times (@EconomicTimes) September 2, 2020
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)