'கொரோனா கடைசி கிடையாது'... 'அடுத்த பெருந்தொற்றுக்கு'... 'இன்னும் தயாரா இருக்கணும்'... 'முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ள WHO தலைவர்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவை அடுத்து வரும் வைரஸ் பெருந்தொற்றை சமாளிக்க உலகம் தற்போதை விட சிறப்பாக தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளிலும் இந்த வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். சில நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோதும், உலகம் முழுவதும் 2 கோடியே 70 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் கொரோனா உயிரிழப்புகள் 9 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், கொரோனாவை அடுத்த பெருந்தொற்றை சிறப்பாக சமாளிக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ள அவர், "இந்த கொரோனா வைரஸ் தொற்று தான் உலகின் கடைசி வைரஸ் பெருந்தொற்று அல்ல. தொற்றுநோய்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை வரலாறு நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. ஆனால் அடுத்த முறை இதுபோன்ற தொற்றுநோய் வரும்போது, அதை எதிர்கொள்ள நாம் அனைவரும் தற்போதை விட சிறப்பாக தயாராக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.