'ஹப்பாடா... இந்த மருந்து சேஃப்தான்.. 42 நாள் ட்ரயல் பண்ணி பாத்ததுல!'.. 'சர்ட்டிஃபிக்கேட்' கொடுத்த பிரபல 'மருத்துவ' இதழ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகின் 210 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ள சூழ்நிலையில் கொரோனாவுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

கடந்த மாதத்தில் ஸ்புட்னிக்-5 என்கிற தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கி பதிவு செய்தது. எனினும் அவசர கதியில் மருந்தை உருவாக்கி பதிவு செய்துள்ளதாக ரஷ்யாவின் மீது கடுமையான குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள மருந்து சிறந்த பாதுகாப்பு அளிப்பதாக பிரபல மருத்துவ இதழ் லான்செட் தெரிவித்துள்ளது.
இது பற்றி லான்செட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்புட்னிக்-5 மருந்து உடலில் ஆன்டிபாடியை அதிகரிப்பதாகவும் அதேசமயம் எந்தவிதமான பக்க விளைவுகளையும், இது உண்டாக்க வில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 26 பேரின் உடலில் 21 நாட்களுக்குள் ஆன்டிபாடிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 28 நாட்களுக்கு ஒரு முறை கொரோனாவை எதிர் கொள்ளும் வகையில் டி-செல்களின் உற்பத்தியை இந்த மருந்து அதிகப்படுத்துவதாகவும் லான்செட் இதழ் தெரிவித்துள்ளது.
இந்த பரிசோதனையில் பங்கேற்றவர்களுக்கு 42 நாட்கள் வரை எந்தவித பக்கவிளைவும் ஏற்படவில்லை என்றும் ஆய்வில் தெரிய வந்ததாக லான்செட் இதழ் குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 என்கிற இந்த தடுப்பூசி மாஸ்கோவின் கேமலாயா நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும்.

மற்ற செய்திகள்
