'தெருவில்' விளையாடச் சென்ற 4 வயது 'சிறுவன்!' .. 'பன்றிகள்' தாக்கியதால் 'நடந்த' சோக 'சம்பவம்!'
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத்தில் 4 வயது குழந்தை ஒன்று தெருவில் விளையாடச் சென்றபோது தெருப்பன்றிகள் தாக்கிக் கொன்றுவிட்டதாக கூறப்படும் சம்பவம் சிங்கரேணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் உள்ள சைதாபாத் போலீஸ் நிலையத்துக்கு வந்த வி.கேஷ்யா என்கிற தந்தை ஒருவர் தனது 4 வயது மகன் ஹர்ஷவர்தன் தான் வசித்து வரும் தெருவுக்கு விளையாடச் சென்றதாகவும், ஆனால் அப்போது பார்த்து தெருவில் இருந்த பன்றிகள், தனது மகனை தாக்கிக் கொன்றுவிட்டதாகவும் கூறி புகார் அளித்தார்.
மேலும், மகனை தூக்கிக் கொண்டு மருத்துமனைக்கு சென்றதாகவும், அங்கு சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த புகாரை அடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சைதாபாத் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பன்றிகள் தாக்கி 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
