‘செங்கல்பட்டு TO கன்னியாகுமரி’.. ‘E-PASS’-ல் ட்விஸ்ட் வைச்ச கார் டிரைவர்.. ‘ஷாக்’ ஆன போலீசார்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுரியில் போலி இ-பாஸ் மூலம் பயணிகளை ஏற்றி வந்த கார் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (28) என்பவர் நேற்று ஐந்து பயணிகளை அழைத்துக்கொண்டு கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறை பகுதிக்கு காரில் வந்துள்ளார். ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் இ-பாஸ் ஸ்கேன் செய்து பார்க்கப்படுவதா கார் டிரைவர் விக்னேஷுக்கு தெரியவந்துள்ளது. உடனே அங்கிருந்து மாற்றுப்பாதை வழியாக அஞ்சுகிராமம் பகுதி சென்று, அங்கிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் நுழைய முயன்றுள்ளார்.
ஆனால் அஞ்சுகிராமம் சோதனைச்சாவடியிலும் இ-பாஸ் ஸ்கேன் செய்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அந்த இ-பாஸ் போலியாக தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதனை அடுத்து பயணிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாஸ் எடுத்து தருவதாக கார் டிரைவர் பணம் வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து கார் டிரைவர் விக்னேஷை கைது செய்த போலீசார் அவரது காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் காரில் வந்த ஐந்து பயணிகள் மற்றும் டிரைவர் விக்னேஷ் ஆகியோர் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
News Credits: Vikatan

மற்ற செய்திகள்
