‘இந்த ஒருநாள் டீமுக்கு நம்ம தோனிதான் கேப்டன்’..! வெளியான ‘வெறித்தனமான’ லிஸ்ட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Dec 24, 2019 02:38 PM

உலகளவில் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்டு ஒருநாள் போட்டிக்கான கனவு அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

MS Dhoni named captain of CA\'s ODI team of the decade

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி இந்திய அணிக்காக விளையாட ஆரம்பித்து 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் #15YearsOfDhonism என்ற ஹேஸ்டேக்கை சமூகவலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். உலகக்கோப்பை தொடருக்கு பின் தோனி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால் தோனி அணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரது ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு உட்பட்ட இணையதளமான கிரிக்கெட்.காம் (WWW.cricket.com.au) கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்டு ஒருநாள் போட்டிக்கான கனவு அணியை உருவாக்கியுள்ளது. அந்த அணியில் இந்திய வீரர்களான தோனி, விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த அணிக்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியை கேப்டனாக நியமித்துள்ளது. தொடக்க ஆட்டகாரராக ரோஹித் ஷர்மாவும், மூன்றாம் நிலை வீரராக விராட் கோலியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த பட்டியலில் இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும் இடம்பெறவில்லை.

மேலும் படிக்க: ‘#15YEARSOFDHONISM'.. 6 அடி உயர ‘தோனி கேக்’!.. மாஸ் காட்டிய பேக்கரி..!

Tags : #MSDHONI #CRICKET #VIRATKOHLI #CAPTIAN ##15YEARSOFDHONISM #ROHITSHARMA #AUSTRALIA