VIDEO: 8 மாச 'கொழந்தைய' இப்டியா தூக்கி எறியுறது?... தாயின் செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்8 மாத குழந்தையை நீச்சல் குளத்தில் தூக்கி எறியும் வீடியோ வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் 8 மாத குழந்தையை ஒரு பெண் பயிற்சியாளர் நீச்சல் குளத்தில் தூக்கி எறிகிறார். உடனே சென்று தூங்குவார் என்று பார்த்தால் அவர் அப்படி எதுவும் செய்யவில்லை. மாறாக சில நொடிகளுக்கு பின் அந்த குழந்தை தத்தக்கா பித்தக்கா என்று கை,கால்களை உதறி மேலே வந்து சிரிக்கிறது.
@mom.of.2.boyss Since tiktok wanted to remove this for violating guidelines. 😒 please do your research before reporting or removing
♬ original sound - mom.of.2.boyss
இந்த வீடியோவை அந்த குழந்தையின் தாய் கிறிஸ்டா மேயர் டிக் டாக்கில் பதிவிட்டு பிற்காலத்தில் குழந்தை தண்ணீருக்குள் விழுந்து விட்டால் தப்பிக்க, முறையான நீச்சல் பயிற்சியாளரை வைத்து பயிற்சி அளிப்பதாக தெரிவித்து இருக்கிறார். சுமார் 7 கோடிக்கும் அதிகமான மக்களால் பார்க்கப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் குழந்தையின் அம்மாவான கிறிஸ்டாவை கண்டபடி திட்டித்தீர்த்து வருகின்றனர். உச்சகட்டமாக சிலர் கிறிஸ்டாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து இருக்கின்றனராம்.

மற்ற செய்திகள்
