“என்ன பண்றேனு பாருங்க!”.. போதை தலைக்கேறி, டிக்டாக்கிற்காக இளைஞர் செய்த வேலை... உயிரைப் பறித்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காளேகுண்டா அருகில் உள்ள பார்வதி நகரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது 22 வயது மகன் வெற்றிவேல், கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவியும் சரண் என்கிற 2 வயது மகனும் இவருடன் வசித்துவந்த நிலையில், நேற்று முன்தினம் வெற்றிவேல், மது அருந்திவிட்டு, தனது நண்பர்கள் 2 பேருடன் ஓசூர் தேர்பேட்டை பகுதியில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.

அப்போது மீன் பிடித்துக்கொண்டே டிக்டாக் வீடியோ வெளியிட முயற்சித்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக் லைக்கிற்காக மீனை உயிருடன் விழுங்கிய வெற்றிவேலின் சுவாசக் குழாயில் எதிர்பாராதவிதமாக மீன் சிக்கியதை அடுத்து, அவருக்கு மூச்சுத் திணறியதால், அவருடைய நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இதனை அடுத்து உயிரிழந்த வெற்றிவேலின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. வெற்றிவேல் மீனை விழுங்கினாரா அல்லது நண்பர்களுடன் டிக்டாக் செய்தபோது பந்தயத்துக்காக இப்படி செய்தாரா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரித்துக்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
