'கணவர் பிரியாணி வாங்கி தராததால்...' 'தற்கொலை செய்த மனைவி...' அவர் எப்படியாவது 'காப்பாத்திடுவார்'னு நெனச்சு தீக்குளிச்சுட்டேன்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jun 26, 2020 03:43 PM

மகாபலிபுரம் பகுதியில் கணவன் பிரியாணி வாங்கி தரவில்லை என தன்னை தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Wife commits suicide as husband does not buy Biryani

மகாபலிபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் தன் மனைவி சௌமியா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார் மனோகரன். கடந்த புதன்கிழமை மனோகரன் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் வெளியே செல்ல முடியாததால் மனோகரனிடம் பணம் கொடுத்து பிரியாணி வாங்கி வருமாறு கூறி பணம் கொடுத்துள்ளார்.

இதனை கவனித்த மனோகரனின் மனைவி சௌமியா தனக்கும் ஒரு பிரியாணி வாங்கி வருமாறு கூறியுள்ளார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி அதனை தட்டிக்கழித்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் கடும்வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையில் முடிந்துள்ளது.

சண்டையின் போது உன்னை எனக்கு பிடிக்கவில்லை என தன் மனைவியிடம் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சௌமியா, பைக்கில் இருந்த பெட்ரோலை பிடித்து மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்று உடம்பில் ஊற்றீ தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் 80 விழுக்காடு காயங்களுடன் மருத்துவமனையில் சௌமியா உயிரிழந்துள்ளார். மேலும் இறப்பதற்கு முன் எண் கணவர் காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கையில் அவசரப்பட்டு இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும், தற்போது தான் என் கணவரையும் குழந்தைகளையும் பிரிந்து போவதை நினைக்கும் போது கவலையாக உள்ளது எனவும் உறவினர்களிடம் புலம்பியதாகக் கூறப்படுகிறது.

குறிபபு: தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #BRIANI

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Wife commits suicide as husband does not buy Biryani | Tamil Nadu News.