உங்க போட்டோவ 'மார்பிங்' பண்ணியாச்சு...! '40 லட்சம் தந்தீங்கன்னா ஒண்ணும் பண்ண மாட்டோம்...' 'இல்லன்னா உங்க போட்டோவ...' டிக்டாக் ஜோடி செய்த விபரீத காரியம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காதல் ஜோடி ஒன்று, ஜவுளிக்கடை உரிமையாளர் மனைவியின் போட்டோவை மார்பிங் செய்து ஆபாச வெப்சைட்டில் போடப் போவதாக மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இயங்கும் ஜவுளிக்கடை ஒன்றில் ஓராண்டாக பணிபுரிந்து வருகிறார் 20 வயதான ஷர்மிளாவும், தூத்துக்குடியை சேர்ந்த சுரேஷ் என்பவரும் டிக்டாக் ஆப் மூலம் காதலித்து தற்போது திருமணமும் செய்துள்ளனர். மேலும் ஷர்மிளா தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட ஷர்மிளாவும், சுரேஷ் ஒரு விபரீத விளையாட்டை தொடங்கியுள்ளனர். ஷர்மிளா தான் பணிபுரியும் ஜவுளிக்கடை உரிமையாளரான பரணியின்(40) மனைவி புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் இருந்து எடுத்துள்ளார்.
அதையடுத்து, 3 நாட்களுக்கு முன் பரணிதரனை செல்போனில் தொடர்பு கொண்டு, அவரது மனைவியின் படத்தை வெப்சைட்டில் இருந்து எடுத்துள்ளதாகவும், இதை ஆபாசமாக மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிட போவதாக மிரட்டியுள்ளனர். மேலும் அப்படி செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் ரூ.40 லட்சம் கொடுக்க வேண்டுமென மிரட்டியுள்ளனர்.
ஷர்மிளா மற்றும் சுரேஷ் பேசிய ஆடியோவை பதிவு செய்த ஜவுளிக்கடை உரிமையாளர் பரணி போலீசில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார், தூத்துக்குடியில் இருக்கும் ஷர்மிளா, சுரேஷ் ஆகியோரை குமாரபாளையத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
விசாரணையில் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் ஆடம்பரமாக வாழ வேண்டும் என ஆசைப்பட்ட காரணத்தால் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளனர். மேலும் இதுபோல் வேறு சில நகைக்கடை உரிமையாளர்களையும் பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்ததுள்ளது.
ஷர்மிளா மற்றும் சுரேஷை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், ஷர்மிளா 7 மாத கர்ப்பிணி என்பதால், அவரை ஜாமீனில் விடுவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
