“வேட்டைக்காரன் பரம்பரைடா.. வேட்டையாட வாரேண்டா!”.. 'உடும்பை' வேட்டையாடிவிட்டு 'இளைஞர்கள்' பார்த்த 'வேலை'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 24, 2020 09:07 PM

உடும்பை வேட்டையாடிவிட்டு, அந்த உடும்பை கையில் வைத்துக்கொண்டபடி, டிக்டாக்கில் நடனமாடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

youths arrested for hunting monitor lizard and doing tiktok

மணப்பாறையை அடுத்த சோலையம்பட்டியைச் சேர்ந்த 6 பேர் துவரங்குறிச்சி வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அங்கு உடும்பை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டுமுள்ளனர். அதன் பின்னர் அந்த உடும்பை கையில் வைத்துக்கொண்டு இளைஞர்கள் செய்த வேலையால்தான் 6 இளைஞர்களும் கூண்டோடு சிக்கிக் கொண்டனர்.

இதில் ஒரு பள்ளிச் சிறுவனைத் தவிர்த்து மீதமிருந்த இளைஞர்கள் அடக்கன். மேலும்,  “வேட்டைக்காரன் பரம்பரைடா .. வேட்டையாட வாரேன்டா” என்ற பாடலுக்கு நடனமாடி, டிக்டாக்கில் வீடியோவும் வெளியிட்டனர். அப்போது கையில் உடும்பை வைத்துக்கொண்டு ஆடியுள்ளனர். இது தொடர்பாக தகவலறிந்த துவரங்குறிச்சி வனக்காவலர்கள் இந்த இளைஞர்கள் செய்த வேலைக்கு, இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.