டிக்டாக் 'ரவுடி பேபி' சூர்யா தற்கொலை முயற்சி...! 'பல பிரிவுகள்ல கேஸ் போட்ருக்காங்க...' 'காலைல திடீர்னு அவங்க வீட்ல வச்சு...' பரபரப்பு சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்த டிக்டாக் பிரபலம் சூர்யா தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அய்யம்பாளையம் அருகே உள்ள சபரிநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி. டிக்டாக்கில் தன் பெயரை சூர்யா என மாற்றி பல டிக்டாக்குகளை செய்து வரும் இவர் ரவுடி பேபி சூர்யா என அழைக்கப்பட்டார்.
சிங்கப்பூருக்கு சென்ற சூர்யா கொரோனா ஊரடங்கு காரணமாக அங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு பிறகு, வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்க அரசு ஏற்பாடு செய்த சிறப்பு விமானங்கள் மூலம் கடந்த 16-ம் தேதி திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.
மேலும் சூர்யா திருப்பூருக்கு வந்த செய்தி அறிந்த அக்கம்பக்கத்தினர் கொரோனா பீதியால் போலீசாருக்கும் சுகாதார துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சூர்யாவின் வீட்டிற்கு வந்த போலீசார் ஆம்புலன்சில் ஏற்றி கொரோனா பரிசோதனைக்கு அழைத்து செல்ல முயன்றனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த சூர்யா, ஆனால் தனக்கு கோவையில் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் வரவேதான் தான் திருப்பூர் வந்ததாக வாதித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், ஆம்புலன்சில் ஏற மாட்டேன் இருசக்கர வாகனத்திலேயே வருவதாகவும், தனக்கு தனி அறை வேண்டும் என பல கட்டளைகளை விதித்துள்ளார்.
அதையடுத்து அன்றிரவு திருப்பூர் ரயில் நிலையம் அழைத்து சென்ற சுகாதார துறையினர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் சூர்யா வீட்டின் முன்பு தனிமைப்படுத்தப்பட்டவர் உள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
அதையடுத்து இந்த செய்தியினை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் குறித்து சூர்யா டிக்டாக்கில் அவதூறு பரப்பும் விதமாகவும், கொலை மிரட்டல் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனை பார்த்த அந்த நிருபர் டிக்டாக் ரவுடி பேபி மீது அந்த நிருபர் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் சூர்யா மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(b), 500 and 506(2) என்ற ஆபாசமாக பேசுதல், அவதூறு பரப்புதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தற்போது இன்று காலை தனது வீட்டில் சூர்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சூர்யாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
குறிப்பு: தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்
