வயசு 11 மாசம் தான்.. ஆனா செஞ்ச ரெக்கார்டு எல்லாம் வேற மாதிரி.. உலக அளவில் கவனம் பெற்ற தமிழக சிறுவன்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவிலை சேர்ந்த 11 மாத சிறுவன் ஒருவன் உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துவருகிறான்.

பொதுவாக குழந்தைகள் அத்தனை சீக்கிரத்தில் எதையும் மறப்பதில்லை. தங்களது வாழ்வில் பார்க்கும் புதிய நபர்கள், அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றை வெகு விரைவில் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் திறன் கொண்டவை. இதன் காரணமாகவே குழந்தைகளால் எளிதில் ஒரு மொழியை கற்றுக் கொள்ள முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். குழந்தைகளை சரியான முறையில் ஊக்குவிக்கும் போது அவர்களுடைய ஞாபகத் திறனும் பல மடங்கு அதிகரித்து விடுகிறது. அதற்கு சாட்சியாக இருக்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த அற்றி ஹெர்மன் எனும் சிறுவன்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ளது தேனாம்பாறை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஹெர்மன். இவருடைய மனைவி பியான்ஷா. இந்த தம்பதிக்கு அற்றி ஹெர்மன் எனும் மகன் இருக்கிறார். தற்போது அற்றி ஹெர்மனுக்கு வயது 11 மாதம் தான். ஆனாலும் அந்த சிறுவனிடம் அபரிமிதமான நினைவாற்றல் இருக்கிறது. சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தும் பொருட்களின் பெயரை கூறினாலே அதனை இனம் கண்டு கொள்கிறான் இந்த குட்டி சிறுவன்.
இதுவரை வீட்டில் பயன்படுத்தும் 233 விதமான பொருட்களின் பெயரை கூறினால் அதனை சரியாக கண்டுபிடித்து சாதனை படைத்திருக்கிறான் ஹெர்மன். வேர்ல்டு ரெக்கார்ட் புக் ஆப் லண்டன் , இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட், ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்ட், கலாம் வேல்டு ரெக்கார்ட்ஸ், மேஜிக் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என பல சாதனைப் புத்தகங்களில் இக்குழந்தையின் பெயர் இடம் பிடித்துள்ளது.
இதனால் உள்ளூர் மக்களிடையே ஹெர்மன் பிரபலமாகியுள்ளான். 11 மாதத்தில் வீட்டில் உள்ள பல பொருட்களை ஹெர்மன் அடையாளம் காண்பதை கண்டு உள்ளூர் மக்களே திகைப்பில் ஆழந்துள்ளனர். இதனிடையே சிறுவனுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துவருகின்றனர்.

மற்ற செய்திகள்
