மெசெஜ் பண்ணிட்டு தெரியாம கூட இப்படி செஞ்சிறாதீங்க.. பேஸ்புக் மார்க் சக்கர்பெர்க் எச்சரிக்கை.. புது அப்டேட்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்மெசஞ்சர் ஆப்பில் செய்யப்படும் மேசேஜ்களை கிரீன்ஷாட் எடுக்க வேண்டாம் என பேஸ்புக் நிறுவன மார்க் சக்கர்பெர்க் எச்சரித்துள்ளார்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பேஸ்புக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் அதன் மெசஞ்சர் செயலியை தகவல் பரிமாற்றத்துக்கும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் மெசஞ்சர் செயலில் மூலம் ஒருவருக்கு அனுப்பும் மேசேஜை கிரீன்ஷாட் எடுக்க வேண்டாம் என பேஸ்புக் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பிட்ட ஒரு விஷயம் குறித்து விவாதிக்கும்போது, பேசும் நபர் குறித்து நம்பகத்தன்மை இல்லை என்றாலோ அல்லது அவர் பேசும் விஷயங்கள் உண்மைக்கு மாறாக ஆட்சேபனைக்கு உரியதாக இருந்தால், அவற்றை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துக்கொண்டு பலரும் பொதுவெளியில் அம்பலப்படுத்தி வருகின்றனர்.
இதில் ஒரு சிலர், தங்கள் அன்புக்கு உரியவர்களின் மெசேஜ்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நினைவுகளாக வைத்து கொள்கின்றனர். அதேசமயம் மிரட்டல்களுக்காகவும் சிலர் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது உண்டு. இதை தடுக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‘எண்டு டூ எண்டு என்கிரிப்டட் மெசஞ்சர் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக யாரேனும் உங்கள் மேசேஜ் பதிவுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்தால் அது குறித்து உங்களுக்கு நோட்டிபிகேஷன் வரும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது எப்படி செயல்படுகிறது என்பதற்கான உதாரணம் ஒன்றையும் மார்க் சக்கர்பெர்க் வழங்கியிருக்கிறார். தனது தொழிலில் நீண்டகால பார்ட்னராக உள்ள பிரிசில்லா ஜானுக்கு மார்க் அனுப்பிய மெசேஜ்களை, அவர் ஸ்கிரீன்ஷாட் எடுத்ததும் அது குறித்த நோட்டிபிகேஷன் மார்க்கிற்கு வந்துவிடுகிறது. அந்த பதிவுகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக டிசப்பியரிங் மெசேஜ் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இது சாட் செய்த குறிப்பிட்ட மெசேஜ்களை நீங்கள் படித்த பிறகு அவை காணாமல் போய்விடும். அதற்காக சிலர் அவற்றை காப்பி செய்தோ அல்லது ஸ்கிரீன்ஷாட்டோ எடுத்து வைத்துக் கொள்வது உண்டு. ஆனால், அது போன்ற நடவடிக்கைகளை பயனாளர்களுக்கு தெரியப்படுத்தும் நடவடிக்கையைதான் பேஸ்புக் நிறுவனம் தற்போது மேற்கொண்டுள்ளது.