‘அமளி துமளி கதகளி!’.. ‘ராகுலுக்கு கண்டனம் தெரிவித்த இணை அமைச்சரை’.. ‘ஆவேசமாக நெருங்கினாரா தமிழக எம்.பி?’
முகப்பு > செய்திகள் > இந்தியாகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில், பேசும்போது, இந்திய இளைஞர்கள் இன்னும் 6 மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, தடி கொண்டு அடிப்பார்கள் என்று பேசினார்.
இந்நிலையில் தம்முடைய முதுகை வலிமையாக்கி கொள்ள சூரிய நமஸ்காரங்கள் செய்வேன் என்று பிரதமர் மோடி நேற்றைய தினம் தனது உரையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராகுல்காந்தியின் அந்த பேச்சுக்கு தனது கண்டனத்தை மத்திய இணை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று மக்களவையில் பதிவு செய்தார்.
அப்போது, எதிர்த்தரப்பில் இருந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் அமைச்சரை நோக்கி கூச்சலிட்டனர். ஆனால் சபாநாயகரோ, அமைச்சரை நோக்கி கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் விருதுநகர் எம்.பி மாணிக் தாகூர், அமைச்சர் ஹர்ஷவர்தனின் இருக்கையின் அருகே எதிர்ப்பு மனநிலையுடன் விரைந்து செல்ல முற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனை அடுத்து, பாஜக உறுப்பினர்கள் உடனடியாக அங்கு கூடினர், அதே சமயம் காங்கிரஸ் எம்.பி.க்களும் அங்கு வர, சபாநாயகர் ஓம் பிர்லா அவையை ஒத்தி வைத்தார்.
ஆனால் இதுகுறித்து பேசிய மணி தாகூர், ‘தான் உண்மையில் ஆக்ரோஷமாக அவரை அச்சுறுத்த சென்றேனா இலையா?’ என்பதை சிசிடிவி காட்சிகளை பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள் என்று சபாநாகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.