ஒரே ஆளுக்கு 8 மனைவியா .. எப்படிண்ணே மெயின்டெய்ன் பண்றீங்க?.. 'நைட்டு மட்டும் இப்படி ஒரு பிளான் வெச்சிருக்கேன்'..
முகப்பு > செய்திகள் > உலகம்தாய்லாந்து: எந்த ஒரு ஆணும் இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்வது மிகவும் கடினம். ஆனால் தாய்லாந்தில் ஒருவர் தனது எட்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் என்பது இருமனம் இணைவது மட்டும் அல்லாமல் இரு குடும்பங்கள் இணைவது. ஆனால், இங்கு 90 'ஸ் கிட்ஸ்க்கு கல்யாணம் நடக்குமா நடக்காதா? என்று ஜாதகம் என்ன நாசா வரை ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு மீம்ஸ்கள் பறக்கின்றன. ஆனால், இங்கு ஒருவர் 8 பேரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தைச் சேர்ந்தவர் ஓங் டாங் சோரூட், டாட்டூ கலைஞரான இவர் 8 பேரை மணந்து அவர்களுடன் ஒரே வீட்டில் ஒன்றாக எந்த வித சண்டையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார். 8 மனைவிகளும் சோரூட் மீது மிகுந்த காதலோடு பழகுகின்றனர். ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். பார்த்ததும் காதல் அடுத்தது கல்யாணம் இதேபோன்று தான் சோரூட் வாழ்விலும் நடந்துள்ளன.
காதல் டூ கல்யாணம் வரை
சோரூட் தனது முதல் மனைவி நாங் ஸ்பெரிட் என்பவரை ஒரு நண்பரின் திருமணத்தில் பார்த்ததும் காதலில் விழுந்துள்ளார் அவரிடம் தனது விருப்பத்தை தெரிவித்து திருமணம் செய்தார். அவரை திருமணம் செய்த பிறகு, இரண்டாவது மனைவி நாங் எல்லை மார்கெட்டில் பார்த்துள்ளார். நாங்க எல்லிற்கு சோரூட்டின் முதல் திருமணம் குறித்து தெரிந்திருந்தும் அவரை திருமணம் செய்துவிட்டார். மூன்றாவது மனைவியை மருத்துவமனையிலும், நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது மனைவியை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பார்த்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
7வது மனைவியை திருமணம் செய்தது மிகவும் சுவாரஸ்யம் தான். தனது தாயுடன் கோயிலுக்கு செல்லும் போது நோங் ஃபில் என்பவரை பார்த்துள்ளார். எட்டவது மனைவியை மற்ற மனைவிகளுடன் விடுமுறையை கழிக்க சுற்றுலா சென்றிருந்த போது பார்த்ததும் காதல் தனது விருப்பத்தை அந்த பெண்ணிடம் தெரிவித்து அதன் பிறகு ஏழு மனைவிகளின் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.
காதல் தான் எல்லாம்
அத்தனை மனைவிகளுடனும் தற்போது ஒரே வீட்டில் ஒன்றாக தான் வாழ்ந்து வருகிறார் சோரூட். இதில் அதிசயம் என்னவென்றால் அவர்களுக்குள் சண்டையே வந்தது இல்லை என்பது தான். சோரூட்டின் குணம் தான் எங்களுக்குள் சண்டையே வராமல் இருக்க காரணமாக இருக்கிறது. 8 மனைவிகள் மீதும் பாரபட்சம் இல்லாத அன்புடன் சோரூட் இருக்கிறார். ஏற்கனவே திருமணமான நபரை ஏன் திருமணம் செய்தீர்கள் என அவரது மனைவிகளிடம் கேட்ட போது அவர்கள் அளித்த ஒரே பதில் 'அவர் மீது தீராத காதல் வந்துவிட்டது' எனக் கூறினர்.
இரவு இப்படிதான்
இரவு படுக்கையை திட்டமிட்டு பகிர்ந்து கொள்வார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் இவருடன் படுக்கையை பகிர்வார். ஒரு மனைவி சோரூட்டுடன் படுக்கையை பகிரும் போது மற்ற மனைவிகள் வேறு ரூமில் படுத்துக்கொள்வார்களாம்.

மற்ற செய்திகள்
