VIDEO: 'ஷாப்பிங் பண்ண வந்துருக்கேன்...' 'டிஸ்டர்ப் பண்ணாம அங்கிட்டு ஓரமா தள்ளி நில்லுங்கையா...' 'அப்புறம் கோவம் வந்திட போகுது...' ஆத்தி இது 'அது' இல்ல... - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > உலகம்தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட்டில் புகுந்து அட்டகாசம் செய்த ராட்சஸ உடும்பின் வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது..

தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஆண்ட்ரூ மாக் கிரேகர் மார்ஷல் என்ற பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் '7- லெவன்' என்ற சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே சாதனங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலமாரியில் ராட்சச உடும்பு ஒன்று அங்கு இருந்த பொருட்களை தன் கனத்த உடலைக் கொண்டு தள்ளிவிட்டபடியே மேலே ஏறுகிறது.
அலமாரியின் மேல்தளத்தில் ஏறி அங்கு சிறிதுநேரம் ஓய்வெடுக்கிறது. இப்படி ஒரு சம்பவத்தை காண்போம் என கடைக்கு வந்த எவருமே நினைத்திருக்க மாட்டார்கள். இதை கண்டவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
இந்த வீடியோவை இணையதளத்தில் ஆயிரக்கணக்கானோர் பார்த்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். ராட்சச உடும்பு சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து சேட்டை செய்ததை பார்க்கும்போது, நானும் உங்களை போல் ஷாப்பிங் செய்ய வந்துள்ளேன். என்னை தொந்தரவு செய்யாமல் ஓரமாக ஷாப்பிங் செய்யுங்கள் என்று கூறுவது போல உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
OMFG pic.twitter.com/a2Vbsh4bjf
— Andrew MacGregor Marshall (@zenjournalist) April 7, 2021

மற்ற செய்திகள்
