'உன்னோட குழந்தை தான் வயித்துல வளருது'... 'புது காதலனுடன் இருந்த முன்னாள் காதலி'... 'செகண்டில் துறவி செய்த கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Jun 20, 2020 06:56 PM

முன்னாள் காதலி வேறொருவருடன் இருப்பதைக் கண்ட துறவி ஆத்திரத்தில் செய்த செயல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Thailand : Buddhist Monk Hacks Pregnant Woman to Death

தாய்லாந்தைச் சேர்ந்த புத்த மதத் துறவி உம் தீரென்ராம். 57 வயதான இவர், துறவியாவதற்கு முன் லம்பாய் புவலோய என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். துறவறத்தைத் தேர்ந்தெடுத்த பின்பு தனது காதலியை அவர் பிரிந்து விட்டார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று தீரென்ராம், தனது முன்னாள் காதலியின் வீட்டிற்கு அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது லம்பாய் புவலோயை தனது புது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

இதனைப் பார்த்த தீரென்ராம் ஆத்திரத்தில் அவர்கள் கார் மீது மோத, லம்பாய்யின் புதிய காதலன் பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். உடனே தனது காரில் இருந்து இறங்கிய தீரென்ராம், தான் வைத்திருந்த பட்டாக் கத்தியால் லம்பாய்யை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்து போனார். இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திலேயே தீரென்ராமை கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்துப் பேசிய தீரென்ராமின் சகோதரர், தனது சகோதரர் புத்த துறவியாகும் முன் லம்பாயை காதலித்ததாகவும், புத்த துறவியானதும் அவரைப் பிரிந்துவிட்டதாகவும், ஆனால் லம்பாய் அடிக்கடி அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் லம்பாயின் வயிற்றில் தீரென்ராமின் குழந்தை வளர்வதால், அதை வைத்து மிரட்டிய அவர், குழந்தை விவகாரத்தை வெளியில் சொன்னால் உனது துறவி வாழ்க்கை நாசமாகிவிடும் எனவும் மிரட்டியதாக'' அவரது சகோதரர் கூறியுள்ளார்.

துறவியால் கொலை செய்யப்பட்ட லம்பாய், எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் என போலீசார் கூறியுள்ளார்கள். புத்த மதத் துறவியே கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Thailand : Buddhist Monk Hacks Pregnant Woman to Death | World News.