'புருஷன்' முதுகுல 14 'புல்லட்' பாஞ்சுருக்கு... மனைவியின் வற்புறுத்தலில் நடந்த 'கொலை'... ஸ்கெட்ச்சும் அவங்களே போட்டு குடுத்துருக்காங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்துள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் கோவிந்தராஜ். டெய்லரான இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும், நான்கு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த நான்காம் தேதி கோவிந்தராஜ் படுகாயங்களுடன் மயங்கிக் கிடந்த நிலையில், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து கோவிந்தராஜ் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் உடலின் முதுகுப்பகுதியில் இருந்து 14 நாட்டு துப்பாக்கிக் குண்டுகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
இதனால், கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசாரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, கோவிந்தராஜ் மனைவியிடம் சந்தேகத்தின் பெயரில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அவரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் குப்புசாமி என்பவரிடம் தினமும் அதிக நேரம் பேசுவது தெரிய வந்தது. உடனடியாக குப்புசாமியை காவல் நிலையம் அழைத்து வந்து இருவரிடமும் விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணையில், கோவிந்தராஜை திட்டமிட்டு கொலை செய்ததாக குப்புசாமி ஒப்புக் கொண்டார். மேலும், கோவிந்தராஜ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். அப்போது அங்கு பணிக்கு வந்த குப்புசாமிக்கு காஞ்சனாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பின்னர் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டுள்ளனர். இது கோவிந்தராஜுக்கு தெரிய வர மனைவி காஞ்சனாவை கண்டித்துள்ளார். இதனால் கணவரை தீர்த்துக்கட்ட குப்புசாமியுடன் இணைந்து திட்டம் தீட்டியுள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியை வாங்கிய குப்புசாமி, தனது நண்பர் ஒருவருடன் இணைந்து கோவிந்தராஜை சுட்டுக் கொலை செய்துள்ளனர். மேலும், காஞ்சனாவின் தூண்டுதலால் தான் கோவிந்தராஜை கொலை செய்ததாக குப்புசாமி தெரிவித்துள்ளார்.
கோவிந்தராஜை கொலை செய்ததன் பெயரில் திட்டம் தீட்டிய அவரது மனைவி மற்றும் குப்புசாமி ஆகியோரை கைது செய்த நிலையில், நாட்டுத் துப்பாக்கியை கொடுத்தவரையும், கொலை செய்ய உதவி செய்த குப்புசமாயின் நண்பர் ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
